CINEMA
இணையத்தில் லீக் ஆன வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்.. யார் யார் இருக்காங்கன்னு பாருங்க..
“வாரிசு” திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக் ஆன நிலையில் தற்போது அப்புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.
“வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, சங்கீதா, ஷாம், யோகி பாபு என பலரும் நடித்து வருகின்றனர்.
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். எஸ் தமன் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியில் “வாரிசு திரைப்படத்தில் 6 பாடல்கள் இடம்பெறுகின்றன” என தமன் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா தென்படுகிறார். இது பாடல் காட்சி போல் தெரிகிறது. இந்த லீக் ஆன புகைப்படம் தற்போது இணையத்தில் லீக் ஆகி வருகிறது. அப்புகைப்படம் இதோ..
#Varisu Exclusive Still ❤️ pic.twitter.com/yMIOlWJJH1
— MV..Muruga. Vel. (@MurugaV45137276) August 22, 2022
“வாரிசு” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப திரைப்படம் என கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சரத்குமார், “வாரிசு திரைப்படத்தில் சென்டிமென்ட், சண்டை காட்சிகள், காமெடி என எல்லாமே இடம்பெறும்” என கூறினார். அதன்படி “வாரிசு” திரைப்படம் குடும்ப சென்டிமென்டுகள் நிறைந்த ஒரு பக்கா கமெர்சியல் திரைப்படமாக உருவாகி வருவதாக தெரிகிறது.
“வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளிவருகிறது, தெலுங்கில் “வாரசுடு” என்ற பெயரில் வெளிவருகிறது. இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தற்போது இந்த புகைப்படம் லீக் ஆகியுள்ளது.