Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

லீக் ஆனது “வாரிசு” திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்..

CINEMA

லீக் ஆனது “வாரிசு” திரைப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்..

“வாரிசு” திரைப்பட படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் கசிந்துள்ளது.

விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தற்போது விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. படக்குழுவினர் பலரும் மிகவும் வெறித்தனமாக உழைத்து வருகின்றனர்.

“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். எஸ் தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். “வாரிசு” திரைப்படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இவர்களுடன் சரத்குமார், பிரபு, குஷ்பு, சங்கீதா, ஷ்யாம், பிரகாஷ் ராஜ், யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். எஸ் ஜே சூர்யாவும் ஒரு ரோலில் நடிக்கிறார் என பேச்சுக்கள் எழுந்து வருகின்றது.

“வாரிசு” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு சுவாரசியமான குடும்ப திரைப்படமாக உருவாகி வருவதாக தகவல்கள் வந்தது. ஆனால் சமீபத்திய பேட்டியில் சரத்குமார் அதனை மறுத்தார். மேலும் “வாரிசு திரைப்படத்தில் ஆக்சன், ட்ராமா, சண்டைக்காட்சிகள், என பொழுதுபோக்கு அம்சங்கள் நிறையவே இருக்கும்” என கூறினார்.

“வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில் “வாரசுடு” என்ற பெயரில் வெளிவருகிறது. இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

இந்நிலையில் தற்போது “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்பட லீக் ஆகி உள்ளது. அதை பார்க்கும் போது துறைமுகத்தில் ஒரு காட்சி எடுக்கிறார்கள் போல் தெரிகிறது. இது சண்டைக்காட்சியாக இருக்கலாம் என வியூகிக்க முடிகிறது. அப்புகைப்படம் இதோ…

விஜய் “வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ்ஜுடன் இணையவுள்ளார். இத்திரைப்படத்தில் சமந்தா நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளிவந்தது. இதில் விஜய் முழுக்க முழுக்க நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.

“வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top