CINEMA
இணையத்தில் லீக் ஆன வாரிசு பாடல்.. என்ன நடக்குது இங்க?
“வாரிசு” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் 20 செகண்ட் வீடியோ ஒன்று இணையத்தில் லீக் ஆகி வைரலாக சுற்றி வருகிறது.
விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. ஆனால் தற்போது ஒரு பாடலே லீக் ஆகியுள்ளது. ஆம்!
“வாரிசு” திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்-ராஷ்மிகா மந்தனா இருவரும் சேர்ந்து நடனமாடும் 20 செகண்ட் வீடியோ ஒன்று லீக் ஆகியுள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய பிறகு பல புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி வருகின்றன. இதனால் ரசிகர்கள் ஒரு புறம் மகிழ்ச்சி அடைந்தாலும் பலர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்த நிலையில் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலே லீக் ஆகியிருப்பது ரசிகர்களை மேலும் அதிர்ச்சியடையச்செய்துள்ளது.
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிபள்ளி இயக்கி வருகிறார். எஸ் தமன் இசையமைத்து வருகிறார். “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, சங்கீதா, ஷாம், யோகி பாபு என பலரும் நடித்து வருகின்றனர்.
“வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளிவருகிறது, தெலுங்கில் “வாரசுடு” என்ற பெயரில் வெளிவருகிறது. இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளிவர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “வாரிசு” திரைப்படம் குடும்ப சென்டிமென்டுகள் நிறைந்த ஒரு பக்கா கமெர்சியல் திரைப்படமாக உருவாகி வருவதாக தெரிகிறது.
“வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
