Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Second Look பின்னாடியே வருது; ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் படக்குழு

CINEMA

Second Look பின்னாடியே வருது; ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் படக்குழு

விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியான நிலையில் Second look, Third look குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இன்று விஜய்யின் 48 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று மாலை 06:01 மணிக்கு விஜய்யின் 66 ஆவது திரைப்படமான “வாரிசு” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தது.

அதில் விஜய் கோட் சூட்டில் ஒரு பிசினஸ் மேக்னட் போல் வெறித்தனமாக தோற்றம் அளிக்கிறார். அவர் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் அமர்ந்திருப்பது போல் உள்ளது.

இதன் மூலம் இத்திரைப்படத்தில் விஜய் ஒரு பிசினஸ் மேனுக்கு வாரிசாக நடிக்கிறார் என வியூகிக்க முடிகிறது. ஏற்கனவே தந்தை-மகன் பாசத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அதை ஊர்ஜிதப்படுத்துவது போல் இப்போஸ்டர் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் “வாரிசு” திரைப்படத்தின் Second look மற்றும் Third look குறித்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது இன்று காலை 11:44 மணிக்கு Second look வெளிவர உள்ளது.

அதே போல் இன்று மாலை 05:02 மணிக்கு Third look வெளிவர உள்ளது. இந்த அப்டேட்டுகளால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். இன்று விஜய் பிறந்த நாளில் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள் இந்த அப்டேட்டுகளால் வானத்திற்கு பூமிக்கும் குதித்து வருகிறார்கள்.

“வாரிசு” திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் பிரபு, சரத்குமார், யோகி பாபு, சங்கீதா, ஷாம், பிரகாஷ் ராஜ் என பலரும் நடித்து வருகின்றனர்.

“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவர உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top