Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

விஜய் ஒரு App Designer..? “வாரிசு” விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?

CINEMA

விஜய் ஒரு App Designer..? “வாரிசு” விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?

“வாரிசு” திரைப்படத்தில் விஜய்யின் கதாப்பாத்திரம் குறித்தான ஒரு முக்கிய அப்டேட் வெளிவந்துள்ளது.

விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடந்து வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரபு, பிரகாஷ் ராஜ், ஷ்யாம், சரத்குமார், குஷ்பு, யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர்.

“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் விஜய் கதாப்பாத்திரம் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.

“வாரிசு” திரைப்படத்தில் விஜய் ஒரு Application Designer ஆக வருகிறாராம். மேலும் விஜய்யின் கதாப்பாத்திரத்தின் பெயர் குறித்த தகவலும் வெளிவந்துள்ளது. ஆம்!

அதாவது “வாரிசு” திரைப்படத்தில் விஜய்யின் பெயர் விஜய் ராஜேந்திரன் என்று ஒரு தகவல் வந்துள்ளது. இத்தகவல்களால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

“வாரிசு” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு Family Entertainer ஆக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

“வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. தெலுங்கில் “வாரசுடு” என்ற பெயரில் வெளிவருகிறது.

விஜய் இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படம் விஜய்யின் 67 ஆவது திரைப்படமாகும். இதில் விஜய் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் என ஒரு தகவல் உள்ளது. மேலும் சமந்தா இத்திரைப்படத்தில் வில்லியாக வருகிறார் என்றும் கூறப்படுகிறது. “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் “தளபதி 67” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top