Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

வாரிசு திரைப்படத்தில் இணையவுள்ள பிரபல பாலிவுட் நடிகை..

CINEMA

வாரிசு திரைப்படத்தில் இணையவுள்ள பிரபல பாலிவுட் நடிகை..

விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படத்தில்  ஒரு பிரபல பாலிவுட் நடிகை இணையவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், சரத் குமார், பிரபு, குஷ்பு, யோகி பாபு, ஷாம் ஆகிய பலரும் நடித்து வருகின்றனர்.

“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைத்து வருகிறார். “வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது. தெலுங்கில் “வாரசடு” என்ற பெயரில் வெளிவருகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

இந்த நிலையில் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை இணையவுள்ளதாக தகவல் வெளிவருகிறது. பிரபல பாலிவுட் நடிகை நந்தினி ராய் விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே “வாரிசு” திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நந்தினி ராய்யும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

நந்தினி ராய் ஹிந்தி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு “பிக் பாஸ்” சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பார்வையாளர்களை கவர்ந்தார். இந்த நிலையில் தான் தற்போது நந்தினி ராய் விஜய்யுடன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

“வாரிசு” திரைப்படத்தை தொடர்ந்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடனே இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. “மாஸ்டர்” திரைப்படத்தை தொடர்ந்து இத்திரைப்படத்தில் லோகேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top