CINEMA
மொத்தமாக ஏமாற்றிய மகான்… கடும் அப்செட்டில் வாணி போஜன்.. படக்குழு வெளியிட்ட முக்கிய அப்டேட்..!
விக்ரம் நடிப்பில் வெளியான மகான் திரைப்படத்திலிருந்து வாணி போஜன் நடித்த காட்சிகள் மொத்தமாக நிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை மகான் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
சியான் விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் “மகான்”. இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். சிம்ரன், பாபி சிம்ஹா மற்றும் பலர் நடித்துள்ளனர். இது சியான் விக்ரமின் 60 ஆவது படமாகும்.

Mahaan
கொரோனா பொது முடக்கம் காரணமாக திரைப்படக் காட்சிகளை எடுப்பதில் சிக்கல் மற்றும் திரையரங்கில் வெளியிடுவது என பல சிக்கல்களை எதிர்கொண்ட மகான் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் விக்ரமுக்கு ஜோடியாக சிம்ரன் மற்றும் வாணி போஜன் நடித்துள்ளனர். ஆனால், திரைப்படக் காட்சிகளில் சிம்ரன் நடித்துள்ள சில காட்சிகளே இடம்பெற்றுள்ளன. வாணி போஜன் நடித்துள்ள காட்சிகள் திரைப்படத்திலிருந்து மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது. இதனால் வாணி போஜன் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர்.

vani Bhojan
சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் கோலிவூட் சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் வாணி போஜன். முதன் முதலாக மகான் திரைப்படம் மூலம் பெரிய ஸ்டார் நடிகருக்கு கதாநாயகியாக நடித்துள்ளார்.
இதன் மூலம் அடுத்தடுத்து முன்னணி பெரிய ஸ்டார் நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து விடலாம் என மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த வாணி போஜனுக்கு தான் நடித்த காட்சிகள் திரைப்படத்திலிருந்து மொத்தமாக நீக்கப்பட்டுள்ளது செய்தியானது அதிர்ச்சியை அளித்துள்ளது.
இது குறித்து கோலிவுட் நண்பர்களிடம் தனது வருத்தத்தை வெளிபடுத்தியதாக கோலிவூட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், படத்தின் காட்சிகளின் நீளம் அதிகமாக இருந்ததாகவும் முக்கய காட்சிகளை நீக்க முடியாது என்பதால் வாணி போஜன் நடித்துள்ள காட்சிகளை நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mahaan
இந்தப் படத்தில் சிம்ரன் பிரிவிற்கு பின்னர் விக்ரமிற்கும் வாணி போஜனுக்கும் காதல் மலரும் காட்சிகள் தான் நீக்கப்பட்டுள்ளது. இதில் கூட்டம் அதிகமாக உள்ள பல காட்சிகள் கொரோனா பரவல் காரணமாக படமாக்க முடியவில்லை. எனவே வாணி போஜன் கேரக்டரை மொத்தமாக நீக்கியுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தக் காட்சிகளை விரைவில் “அன்சீன்” காட்சிகளாக இணையத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
