CINEMA
வட சென்னை 2 விரைவில் வரும்.. ரசிகர்களுக்கு வெற்றி மாறன் சர்ப்ரைஸ்
“வட சென்னை” பாகம் 2 திரைப்படம் குறித்து வெற்றி மாறன் சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனுஷ்- வெற்றி மாறன் கூட்டணியில் வெளியான திரைப்படம் “வட சென்னை”. வட சென்னையில் நடக்கும் கேங்கஸ்டர் கதைக்களமாக இத்திரைப்படம் அமைந்திருந்தது. மேலும் ரசிகர்கள் பலராலும் இத்திரைப்படம் பெரிதும் ரசிக்கப்பட்டது.
“வட சென்னை” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வெற்றி மாறன் இது குறித்து ஒரு சர்ப்ரைஸ் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
தனுஷ் நடிப்பில் உருவான “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா என படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இதில் குறிப்பாக இயக்குனர் வெற்றி மாறன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் “தற்போது நான் விடுதலை, வாடி வாசல் ஆகிய திரைப்படங்களில் பிசியாக இருக்கிறேன். இந்த திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிந்த பிறகு தனுஷும் நானும் வட சென்னை இரண்டாம் பாகத்தில் இணையவுள்ளோம்” என கூறியுள்ளார். இச்செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
வெற்றி மாறன் தனுஷை வைத்து “பொல்லாதவன்”, “ஆடுகளம்”, “வட சென்னை”,”அசுரன்” ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார். இத்திரைப்படங்கள் வேற லெவல் ஹிட் ஆகின. அதே போல் “வட சென்னை” பாகம் 2 திரைப்படமும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் நடித்த “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 18 ஆம் தேதி வெளிவருகிறது. இதில் தனுஷுடன் பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன், ராசி கண்ணா, பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா ஆகியோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
