Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“வாத்தி” தனுஷ் எப்படி இருக்கார் ன்னு பாருங்க.. வெளியானது ஃபர்ஸ்ட் லுக்

CINEMA

“வாத்தி” தனுஷ் எப்படி இருக்கார் ன்னு பாருங்க.. வெளியானது ஃபர்ஸ்ட் லுக்

தனுஷ் நடிப்பில் உருவான “வாத்தி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது.

தனுஷ் தற்போது பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார். தனுஷ் நடித்த “தி கிரே மேன்” என்ற ஹாலிவுட் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து பட்டையை கிளப்பியது. இதில் தனுஷ் சில காட்சிகளே வந்திருந்தாலும் சண்டை காட்சியில் மிரட்டி எடுத்துவிட்டார்.

 மேலும் தனுஷ் நடித்த “திருச்சிற்றம்பலம்” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி வெளிவருகிறது. அதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் “நானே வருவேன்” என்ற திரைப்படமும் வெளிவர தயாராக உள்ளது. இதில் தனுஷ் Cow Boy ஆக நடித்திருக்கிறார் என கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து “ராக்கி”, “சாணி காயிதம்” ஆகிய திரைப்படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் “கேப்டன் மில்லர்” என்ற திரைப்படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். இது Period Film எனவும் தெரிய வருகிறது. பிரிட்டிஷ் காலத்தின் பின்னணியில் கதை நகர்கிறது என சில செய்திகள் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் தற்போது தனுஷ் நடித்த “வாத்தி” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது. அதில் நூலகத்தில் புத்தகத்திற்கு நடுவே எழுதுவது போல் தனுஷ் தென்படுகிறார். போஸ்டர் அட்டகாசமாக வெளிவந்துள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

“வாத்தி” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவர உள்ளது. இத்திரைப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். ஜி வி பிரகாஷ் குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

“வாத்தி” திரைப்படத்தின் டீசர் நாளை வெளிவர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top