CINEMA
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலக நாயகனுக்கு வழங்கிய கோல்டன் விசா..
ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நடிகர் கமல் ஹாசனுக்கு கோல்டன் விசாவை வழங்கி உள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, ஒவ்வொரு துறையிலும் தனித்துவம் மிக்கவர்களுக்கு கோல்டன் விசா கொடுப்பார்கள். தமிழகத்தில் பார்த்திபன், த்ரிஷா, வெங்கட் பிரபு ஆகியோர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசின் கோல்டன் விசாவை பெற்றுள்ளனர். அதே போல் கேரளத்தில் மோகன் லால், பிரித்விராஜ், மம்முட்டி ஆகியோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
இந்த கோல்டன் விசாவினால் பல சலுகைகள் கிடைக்கும். அதாவது இந்த கோல்டன் விசா பத்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். அந்த பத்தாண்டுகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் எங்கு வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம், தொழில் தொடங்கலாம், அதனை பெறுபவர் மட்டுமல்லாது அவரின் குடும்பமும் அங்கே தங்கிக் கொள்ளலாம்.
பத்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கோல்டன் விசாவை புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில் பார்த்திபன், த்ரிஷா, வெங்கட் பிரபு ஆகியோரை தொடர்ந்து தற்போது கமல் ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கோல்டன் விசாவை வழங்கி உள்ளது.
கமல் ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான “விக்ரம்” திரைப்படம் உலகளவில் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து வருகிறது. “விக்ரம்” திரைப்படம் வெளியாவதற்கு முன்பே துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் “விக்ரம்” திரைப்படத்தின் டிரைலர் ஒளிபரப்பப்பட்டது.
மேலும் அங்கே கமல் ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் தற்போது கமல் ஹாசனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.