CINEMA
தனது மகனின் கை பலத்தை வியந்து பார்த்த உதயநிதி… வைரல் புகைப்படம்
தனது மகனின் கை பலத்தை காண்பிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் நடிகராக மட்டும் அல்லாது ரெட் ஜெயின்ட் மூவீஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக பல திரைப்படங்களையும் வாங்கி வெளியிட்டு வருகிறார். சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் பல வெற்றித் திரைப்படங்களை வெளியிட்டு வந்தார். “ராதே ஷ்யாம்”, “காத்து வாக்குல ரெண்டு காதல்”, “டான்”, “விக்ரம்” ஆகிய திரைப்படங்கள் அதில் முக்கியமானவை. அதிலும் “விக்ரம்” திரைப்படம் தற்போது உலகளவில் ரூ. 400 கோடியை தாண்டி கலெக்சன் அள்ளியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் தற்போது சேப்பாக்கம் தொகுதியின் ஆளுங்கட்சி எம். எல். ஏ.வாக திகழ்கிறார். இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது.
சாதிய சமூகத்தை பளீர் என அறையும் கதையம்சத்தை கொண்ட இத்திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படமாக அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவருடன் கீர்த்தி சுரேஷ், ஃபகத் ஃபாசில், வடிவேலு ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். மேலும் இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு இன்பநிதி என்ற மகனும் தன்மயா என்ற மகளும் உண்டு. இதில் இன்பநிதி கால் பந்து விளையாட்டின் மீது சிறு வயதில் இருந்தே ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் கூட நெரேகா கால்பந்து அணிக்கு தேர்வானார்.
இந்நிலையில் இன்பநிதி தன்னுடைய கை பலத்தை காட்டுவது போலும் அதனை தான் வியந்து பார்ப்பது போலும் உதயநிதி ஸ்டாலின் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.