Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“உதயநிதி தம்பிக்கு நன்றி”; நெகிழ்ச்சியில் டிவீட் செய்த கமல்..

CINEMA

“உதயநிதி தம்பிக்கு நன்றி”; நெகிழ்ச்சியில் டிவீட் செய்த கமல்..

“விக்ரம்” திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் திரைப்படத்தை புகழ்ந்து தள்ளி டிவீட் செய்துள்ளார்.

“விக்ரம்” திரைப்படம் நாளை திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. கமல் ஹாசன் பல நாட்களாகவே “விக்ரம்” திரைப்படத்தை தீயாக புரோமோட் செய்து வருகிறார்.

இந்தியாவின் முக்கியமான நகரங்களுக்கு சென்றும் உலகின் பல நாடுகளுக்கு சென்றும் “விக்ரம்” திரைப்படத்தை விளம்பரம் செய்து வருகிறார். இதன் உச்சக்கட்டமாக நேற்று துபாயில் அமைந்துள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் “விக்ரம்” திரைப்படத்தின் புரோமோ ஒளிபரப்பப்பட்டது.

புர்ஜ் கலிஃபாவின் பிரம்மாண்ட கட்டிடத்தில் “விக்ரம்” திரைப்படத்தின் புரோமோ வெளியான போது அங்கே ரசிகர்கள் உற்சாக கோஷமிட்டனர். மேலும் அங்கே வெளியாகும்போது கமல் ஹாசன் ரசிகர்களிடையே பங்கேற்றார். “விக்ரம்” திரைப்படத்தின் புரோமோ புர்ஜ் கலிஃபாவில் வெளியானது திரையுலைகினரை “ஓ” போட வைத்துள்ளது.

இந்நிலையில் “விக்ரம்” திரைப்படத்தை தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் கண்டுள்ளார். அதன் பின் தனது டிவிட்டர் பக்கத்தில் “விக்ரம்” திரைப்படத்தை பாராட்டி டிவிட் செய்துள்ளார். அதில் “விக்ரம் சூப்பராக இருக்கிறது. இந்த பிரம்மாண்ட அனுபவத்தை தந்ததற்கு கமல் ஹாசனிற்கும் படக்குழுவிற்கும் மிக்க நன்றி. நிச்சயமாக திரைப்படம் பிளாக் பஸ்டர் தான்” என தெரிவித்துள்ளார்.

அதற்கு பதில் அளித்த கமல் ஹாசன் “நன்றி உதயநிதி தம்பி. உங்களது மதிப்பு எங்கள் குழுவிற்கு மிகவும் முக்கியமான ஒன்று” என நன்றி தெரிவித்துள்ளார்.

“விக்ரம்” திரைப்படம் நாளை கோலாகலமாக வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தோடு காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு திரையரங்குகளிலும் Booking தாறு மாறாக நடைபெறுகிறது.

““விக்ரம்” திரைப்படத்தை ராஜ் கமல் நிறுவனம் சார்பாக கமல் ஹாசனும், ஆர். மஹேந்திரனும் தயாரித்துள்ளனர். மேலும் ரெட் ஜெயிண்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தை வெளியிட உள்ளார். இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top