Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“அருண்ராஜா மனைவியை எங்களால காப்பாத்த முடியல”.. கலங்கும் உதயநிதி

CINEMA

“அருண்ராஜா மனைவியை எங்களால காப்பாத்த முடியல”.. கலங்கும் உதயநிதி

இயக்குனர் அருண்ராஜா காமராஜ் மனைவியை எங்களால் காப்பாற்ற முடியவில்லை என உதயநிதி ஸ்டாலின் கண்கலங்கிய செய்தி வைரலாகி வருகிறது.

அருண்ராஜா காமராஜ் சின்னத்திரையில் இருந்து பல கஷ்டங்களையும் தடைகளையும் தாண்டி வெள்ளித்திரைக்குள் நுழைந்தவர். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான “பீட்சா” திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

அதன் பின் “ராஜா ராணி” திரைப்படத்தில் காமெடியனாக அறிமுகமாகி அதன் பின்  “மான் கராத்தே”, “பென்சில்”, “மரகத நாணயம்”, “நட்புன்னா என்ன ன்னு தெரியுமா?” போன்ற திரைப்படங்களிலும் காமெடியனாக கலக்கினார்.

“ஜிகர்தண்டா” திரைப்படத்தில் பாடகராக அறிமுகம் ஆகிய இவர் “கபாலி” திரைப்படத்தில் இடம்பெற்ற “நெருப்பு டா” என்ற பாடலை எழுதியும் பாடியும் உள்ளார். இதனை தொடர்ந்து “கனா” திரைப்படத்தை இயக்கினார்.

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இதனிடையே கடந்த 2021 ஆம் ஆண்டு அருண்ராஜா காமராஜ் மற்றும் அவரது மனைவி சிந்துஜா இருவரையும் கொரோனா தொற்று தாக்கியது. இதில் சிகிச்சை பலன் இல்லாமல் அவர் மனைவி சிந்துஜா துர்திஷ்டவசமாக உயிரிழந்தார். இச்சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

சமீபத்தில் ஒரு Youtube channel-ல் பேட்டி அளித்த நடிகர் மற்றும் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இது குறித்து பேசியுள்ளார். அதில் “எங்களால் அருண்ராஜாவின் மனைவியை காப்பாற்ற முடியவில்லை. அவரின் மனைவி நெஞ்சுக்கு நீதி படப்பிடிப்பில் எங்களுக்கு பெரும் உதவிகளை செய்தார். அவர் இறப்பு எங்களுக்கு மீள முடியாத இழப்பு” என கண்கலங்கிய படி கூறியுள்ளார். உதயநிதி இவ்வாறு கண்கலங்கி பேசியது ரசிகர்களை வருத்தத்தில் மூழ்கடித்துள்ளது.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் வருகிற மே 20 ஆம தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top