CINEMA
டான் இயக்குனருடன் இணையும் சூப்பர் ஸ்டார்.. வில்லன் யாரு ன்னு தெரியுமா?
“ஜெயிலர்” திரைப்படத்திற்கு பிறகு “தலைவர் 170” திரைப்படத்தில் டான் திரைப்பட இயக்குனருடன் ரஜினிகாந்த் இணையவுள்ளதாகவும் அத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பவர் குறித்தும் ஒரு மாஸ் தகவல் வெளிவந்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “ஜெயிலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் 22 ஆம் தேதி தொடங்கியது. “பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து நெல்சன் இத்திரைப்படத்தை இயக்குகிறார்.
“பீஸ்ட்” திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்த நிலையில் இதில் திரைக்கதையை சற்று மேம்படுத்த நெல்சனுடன் கே எஸ் ரவிக்குமார் இணைந்து பணியாற்றியதாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த தகவல் குறித்த உண்மை தன்மை தெரியவில்லை.
“ஜெயிலர்” திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. மேலும் பிரியங்கா மோகன், ஐஸ்வர்யா ராய், சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் ஜெய் ஒரு முக்கிய ரோலில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.
ரஜினிகாந்த்-ரம்யா கிருஷ்ணன் காம்போவை பற்றி நாம் கூறத்தேவையே இல்லை. “படையப்பா” திரைப்படத்தில் நீலாம்பரியாக வந்து மிரட்டிவிட்டு போனவர் ரம்யா கிருஷ்ணன். “படையப்பா” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மீண்டும் “ஜெயிலர்” திரைப்படத்தின் மூலம் ரஜினியுடன் இணைந்துள்ளார்.
“ஜெயிலர்” திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் “டான்” திரைப்பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் “தலைவர் 170” திரைப்படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இதற்கு முன் சிபி சக்கரவர்த்தி நடிகர் விஜய் மற்றும் ரஜினி ஆகியோருக்கு கதை சொன்னதாக கூறப்பட்டது. இதில் ரஜினி ஒகே சொல்லியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் “தலைவர் 170” திரைப்படத்தில் அரவிந்த் சுவாமி, ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளார் என்று தகவல் வருகிறது. இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.