CINEMA
அப்டேட் விடுவதில் பெரிய நடிகர்களையே ஓரங்கட்டிய உதயநிதி… இப்போ எந்த படத்தை வாங்கியிருக்காரோ??
அப்டேட் விடுவதில் பெரிய பெரிய நடிகர்களையே ஓரங்கட்டி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். இப்போ யாரோட படத்தை வாங்கி இருக்கிறார் தெரியுமா?
உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பாக சமீப காலமாக பல திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கூட சந்தானம் நடிப்பில் வருகிற 29 ஆம் தேதி வெளிவர இருக்கும் “குலு குலு” திரைப்படத்தை வெளியிடுவதாக அறிவிப்பு வெளிவந்தது.
மேலும் கார்த்தி நடிப்பில் வெளிவர இருக்கும் “சர்தார்” திரைப்படத்தையும், சீயான் விக்ரம் நடிப்பில் வெளிவர இருக்கும் “கோப்ரா” திரைப்படத்தையும் வெளியிட உள்ளார். அடுத்ததாக அஜித் நடித்து வரும் “AK61” திரைப்படத்தையும் வாங்க உள்ளார் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு பல திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் சில நேரங்களுக்கு முன் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஒரு புது அறிவிப்பு வெளிவர உள்ளதாக அறிவித்துள்ளார்.
A super big announcement is coming your way today at 6PM, stay tuned! ✨😉 pic.twitter.com/2k2vuJpbhO
— Red Giant Movies (@RedGiantMovies_) July 16, 2022
இச்செய்தியை கேட்ட ரசிகர்கள் “திருச்சிற்றம்பலம் திரைப்படமாக இருக்குமோ?” “பொன்னியின் செல்வவன் திரைப்படமாக இருக்குமோ?” “வாரிசு திரைப்படமாக இருக்குமோ?” என இந்த முறை எந்த திரைப்படத்தை உதயநிதி வாங்கி உள்ளார்? என இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின் கடந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன் பிறகு அவர் பல திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார் என சில விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும் அவர் பல தயாரிப்பாளர்களை மிரட்டுகிறார் எனவும் வதந்தி கிளம்பியது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் இந்த விமர்சனங்களை எல்லாம் மறுத்து விட்டார்.
உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.