CINEMA
இயக்குனரை துப்பாக்கியால் மிரட்டும் உதயநிதி.. எந்த லெவலுக்கு வேணாலும் இறங்குவோம்..
இயக்குனர் மாரி செல்வராஜ்ஜிடம் உதயநிதி ஸ்டாலின் துப்பாக்கி காட்டி மிரட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் “மாமன்னன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு ஆகியோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
ரெட் ஜெயின்ட் மூவீஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இந்த நிலையில் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் “மாமன்னன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் உதயநிதி ஸ்டாலின் ஸ்டைலாக கண்ணாடி அணிந்திருக்கிறார். அவர் கதாப்பாத்திரம் City guy கதாப்பாத்திரமாக தெரிகிறது. அதில் அவர் இயக்குனர் மாரி செல்வராஜ்ஜிடம் ஒரு துப்பாக்கியை நீட்டுகிறார். இவ்வாறு அந்த புகைப்படம் அமைந்துள்ளது.
#Maamannan @mari_selvaraj pic.twitter.com/NvYemi6q5X
— Udhay (@Udhaystalin) August 27, 2022
மாரி செல்வராஜ் இதற்கு முன் இயக்கிய “பரியேறும் பெருமாள்”, “கர்ணன்” ஆகிய திரைப்படங்கள் மாபெறும் வெற்றிபெற்றது. எப்போதும் கிராமத்தை மையமாக வைத்தே இயக்கும் மாரி செல்வராஜ் தற்போது தனது கதையை நகரத்திற்கு மாற்றியுள்ளதாக தெரிகிறது.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “கழகத் தலைவன்” திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. மேலும் “கோப்ரா”, “வெந்து தணிந்தது காடு” போன்ற திரைப்படங்களை வெளியிட உள்ளார். தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
“கோப்ரா” திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது. மேலும் “வெந்து தணிந்தது காடு” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளிவருகிறது.