Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

உதயநிதி இந்த படத்தையும் வாங்கிட்டாரு .. New Update!

CINEMA

உதயநிதி இந்த படத்தையும் வாங்கிட்டாரு .. New Update!

உதயநிதி ஸ்டாலின் தற்போது எந்த திரைப்படத்தை வாங்கியிருக்கிறார் தெரியுமா?

உதயநிதி ஸ்டாலின் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக தனது “ரெட் ஜெயின்ட் மூவீஸ்” நிறுவனம் சார்பாக பல திரைப்படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறார். சில திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார்.

சமீபத்தில் கூட “அரண்மனை 3”, “ராதே ஷ்யாம்”,  “காத்துவாக்குல ரெண்டு காதல்”, “டான்” “விக்ரம்” ஆகிய திரைப்படங்களை வெளியிட்டார். அதனை தொடர்ந்து கார்த்தி நடித்து வரும் “சர்தார்” திரைப்படத்தை வெளியிட உள்ளார். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளிவருகிறது.

இந்நிலையில் தற்போது புதிய திரைப்படம் ஒன்றை வாங்கி வெளியிட உள்ளார். அதாவது சீயான் விக்ரம் நடித்த “கோப்ரா” திரைப்படத்தை வெளியிட உள்ளார். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 11 ஆம் தேதி வெளிவர உள்ளது.

“கோப்ரா” திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன் “டிமாண்டி காலனி”, “இமைக்கா நொடிகள்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர்.

“கோப்ரா” திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக “கே ஜி எஃப்” புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

“கோப்ரா” திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளது.

“கோப்ரா” திரைப்படத்தை சவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித் குமார் தயாரித்துள்ளார்.

ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன்பு “கோப்ரா” திரைப்படத்தில் இடம்பெற்ற  “தும்பி துள்ளல்” பாடல் வெளியாகி வேற லெவல் ஹிட் ஆனது. அதன் பின் சமீபத்தில் “அதீரா” பாடல் அதிரடியாக வந்து பட்டையை கிளப்பியது.

இதனிடையே “கோப்ரா” திரைப்படத்தின் வெறித்தனமான டீசர் வெளிவந்தது. அதன் மூலம் விக்ரம் “கோப்ரா” திரைப்படத்தில் பல கெட் அப்களில் நடிக்கிறார் என்பதும் தெரிய வந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top