CINEMA
அப்படியே த்ரிஷா மாதிரியே இருக்காங்களே.. யார்ப்பா இவங்க??
த்ரிஷா போலவே முக அமைப்பு கொண்ட ஒருவர் தற்போது இணையத்தையே கலக்கி வருகிறார்.
உலகத்தில் 7 பேரும் ஒரே மாதிரி இருப்பார்கள் என கூறுவார்கள். அது பொய்யா? உண்மையா? என தெரியாது. ஆனால் திரைப்பட பிரபலங்கள் போலவே அச்சு அசலாக சிலர் பொது வெளியில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். இயற்கையாகவே இவர்களின் முகம் சினிமா பிரபலங்களை அச்சடித்தது போலவே இருக்கும்.
கமல் ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய் என இவர்களை ஜெராக்ஸ் காப்பி எடுத்தது போல் பலர் சுற்றுக்கொண்டு தான் இருக்கிறார்கள். சிறிதளவு வித்தியாசத்தில் தான் அவர்கள் சினிமா பிரபலம் இல்லை என கண்டுபிடிக்க முடிகிறது.
இது போன்ற ஆட்களுக்கு தற்போது இணையம் தான் ஒரு வரப்பிரசாதம். சமீப காலமாக சினிமா பிரபலங்கள் போலவே இருக்கும் இவர்கள் அந்தந்த நடிகர்களை போலவே உடையணிந்து அவர்களின் நடிப்பை ரெப்லிக்கா செய்து வருகிறார்கள். இது தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. சிலர் தனக்கு பிடித்த நடிகர்களை போலவே தங்களை மாற்றிக்கொள்வதும் உண்டு.
இவ்வாறு இருக்கையில் நடிகை த்ரிஷா போலவே இருக்கும் ஒரு இன்ஸ்டா பிரபலம் சமீபத்தில் “பொன்னியின் செல்வன்” த்ரிஷாவின் குந்தவை கெட் அப்பில் தோன்றி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
அதனை பார்த்த பலரும் “அப்படியே த்ரிஷா போலவே இருக்கிறீர்கள்” என கூறி அசந்து போய் பார்த்து வருகின்றனர்.
அந்த இன்ஸ்டா பிரபலத்தின் பெயர் தீபிகா விஜய். த்ரிஷா போலவே முக அமைப்புக் கொண்ட இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் த்ரிஷா போலவே உடையணிந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
View this post on Instagram
அந்த புகைப்படங்களை பார்க்கும்போது “இது த்ரிஷாவா? இல்லையா?” என மனதுக்குள் குழப்பம் வந்து போகிறது. தற்போது இவர் த்ரிஷாவின் குந்தவை கெட் அப்பில் தோன்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram
View this post on Instagram
