CINEMA
அரசியல் கட்சியில் இணையப் போகும் த்ரிஷா.. ஷாக் தகவல்
நடிகை த்ரிஷா பிரபல அரசியல் கட்சி ஒன்றில் இணையப்போவதாக தகவல்கள் வருகின்றன.
நடிகைகள் அரசியலுக்கு வருவது என்பது எப்போதும் நடப்பது தான். ஜெயலலிதா தொடங்கி நமீதா வரை அதன் பட்டியல் நீளும். இதில் ஜெயலலிதா தமிழகத்தில் அதிக முறை ஆட்சி செய்த முதலமைச்சராகவும் திகழ்ந்தார்.
இந்த நிலையில் தான் த்ரிஷா ஒரு பிரபல அரசியல் கட்சியில் இணையப்போவதாக தகவல் வருகிறது. அதாவது அனைத்திந்திய காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொள்ளப் போவதாக த்ரிஷா முடிவெடுத்துள்ளாராம். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா கடந்த 20 வருடத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி ஆகிய எண்ணற்ற கதாநாயகர்களுடன் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியில் அக்சய் குமார், தெலுங்கில் மகேஷ் பாபு போன்ற பெரிய பெரிய ஸ்டார்களுடன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
எந்த கதாப்பாத்திரத்தையும் கச்சிதமாக நடிக்க கூடியவர் என பலராலும் பாராட்டப்படுபவர் த்ரிஷா. த்ரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் உருவான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் “குந்தவை” கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த மாதம் இத்திரைப்படத்தின் டீசர் வெளிவந்து பட்டையை கிளப்பியது.
மேலும் த்ரிஷா “சதுரங்க வேட்டை 2” திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது “தி ரோடு” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் மலையாளத்தில் “ராம் பார்ட் 1” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் தற்போது த்ரிஷா அரசியலுக்குள் நுழையப்போவதாக தகவல்கள் வருகின்றன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
