Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

மினுமினுக்கும் இளவரசி த்ரிஷா.. வெளிவந்தது புதிய போஸ்டர்..

CINEMA

மினுமினுக்கும் இளவரசி த்ரிஷா.. வெளிவந்தது புதிய போஸ்டர்..

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் த்ரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாப்பாத்திரத்தின் புதிய போஸ்டர் வெளிவந்துள்ளது.

மணி ரத்னம் இயக்கி உள்ள வரலாற்று புனைவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவருகிறது. இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளிவர உள்ளது.

ஆதலால் வெகு மும்முரமாக இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. “பொன்னியின் செல்வன்” நாவலை படமாக்குவதற்கு எம் ஜி ஆர் முதல் பல ஜாம்பவான்கள் முயற்சி செய்தும் முடியவில்லை. ஆதலால் இத்திரைப்படத்தை தமிழ் திரையுலகம் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், பார்த்திபன் ஆகிய பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் சீயான் விக்ரம் ஏற்று நடித்த ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் ஒன்று வெளிவந்தது. அதில் விக்ரம் வெற்றித் திலகம் இட்டு குதிரையில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் தேற்றத்தோடு தென்பட்டார்.

அதனை தொடர்ந்து கார்த்தி ஏற்று நடித்த வந்தியதேவன் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் வெளிவந்தது. மேலும் நேற்று ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்த அழகு பதுமையான நந்தினி கதாப்பாத்திரத்தின் போஸ்டர் ஒன்று வெளிவந்து வைரல் ஆனது.

இந்நிலையில் தற்போது த்ரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாப்பாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் த்ரிஷா வித்தியாசமான தோற்றத்தில் அழகாய் அம்சமாய் தோன்றியுள்ளார். தற்போது இந்த போஸ்டர் வைரல் ஆகி வருகிறது.

த்ரிஷா ஏற்று நடித்த குந்தவை கதாப்பாத்திரம் “பொன்னியின் செல்வன்” நாவலின் முக்கிய கதாப்பாத்திரம் ஆகும். மிகவும் அழகான அறிவான அரசியல் பெண்ணாக வரும் இளவரசி கதாப்பாத்திரமே குந்தவை கதாப்பாத்திரம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top