CINEMA
த்ரிஷா அரசியலில் நுழைகிறாரா? வதந்திக்கு முற்றுப்புள்ளி…
நடிகை த்ரிஷா ஒரு தேசிய கட்சியில் இணையவுள்ளார் என செய்தி பரவிய நிலையில் அச்செய்தியின் உண்மைத் தன்மை குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று நடிகை த்ரிஷா அரசியலில் நுழையப்போகிறார் எனவும் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் எனவும் செய்திகள் பரவின. இச்செய்தியால் பலரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். “த்ரிஷாவுக்கு ஏன் வேண்டாட வேளை” என பலரும் விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் இது குறித்து த்ரிஷா தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என தெரியவருகிறது. மேலும் த்ரிஷா அரசியலில் நுழையப்போகிறார் என்ற செய்தி வெறும் வதந்தி என்றும், த்ரிஷா தற்போது நடிப்பில் தான் முழு கவனம் செலுத்தி வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதில் இருந்து த்ரிஷா அரசியலில் நுழையப்போகிறார் என பரவிய செய்தி முழுக்க முழுக்க வதந்தி என தெரியவருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி ஆகிய எண்ணற்ற கதாநாயகர்களுடன் நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது ஹிந்தியில் அக்சய் குமார், தெலுங்கில் மகேஷ் பாபு போன்ற பெரிய பெரிய ஸ்டார்களுடன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
த்ரிஷா, மணிரத்னம் இயக்கத்தில் உருவான “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் “குந்தவை” கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகிறது.
தற்போது “தி ரோடு” என்ற திரைப்படத்தில் த்ரிஷா நடித்து வருகிறார். அதே போல் மலையாளத்தில் “ராம் பார்ட் 1” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.