Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

நாளைக்கு “ஆரம்பிக்கலாங்களா”…???

CINEMA

நாளைக்கு “ஆரம்பிக்கலாங்களா”…???

கமல் ரசிகர்களுக்கு நாளை ஒரு பெரிய ட்ரீட் ஒன்று காத்திருக்கின்றது.

கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் “விக்ரம்”. லோகேஷ் கனகராஜ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ்-கமல் கூட்டணி மாஸாக கலக்கப்போவது உறுதி என ரசிகர்கள் வெயிட்டிங்கில் வெறியேறி கிடக்கிறார்கள்.

அதே போல் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என மாஸ் ஹீரோக்களின் கூட்டணி வேறு. படம் வெளியாகும் நாளில் நிச்சயம் திருவிழா தான் என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள்.

வெயிட்டிங்கில் வெறியேத்திக் கொண்டிருந்த “விக்ரம்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் “பத்தல பத்தல” பாடல் சமீபத்தில் வெளிவந்துள்ளது. கமல் வேற லெவலில் இறங்கி குத்தியிருக்கிறார். பாடல் தர லோக்கலாகவும் மாஸாகவும் இருக்கிறது. பாடலில் கமல்ஹாசனின் அரசியல் ஒட்டி  சில வரிகளும் இடம்பெற்றுள்ளன. வெகு காலம் கழித்து கமல்ஹாசன் குத்து பாடல் ஒன்றை பாடியுள்ளார். வெகு காலம் கழித்து கமல் திரைப்படத்தில் குத்து பாடல் ஒன்று இடம்பெறுகிறது என்றே சொல்லவேண்டும்.

இந்நிலையில் நாளை மாலை 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து “விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு “விக்ரம்” திரைப்படத்தின் அறிவிப்பு வந்ததில் இருந்தே ரசிகர்கள் திரைப்படத்தின் அப்டேட்டிற்காக காத்துக் கொண்டிருந்தனர். சென்ற ஆண்டில் “விக்ரம்” திரைப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார் என அறிவிப்பு  வந்தது. மேலும் இத்திரைப்படத்தினை “ஹாட் ஸ்டார்” நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வந்தது.

அதனை தொடர்ந்து கமல் தர லோக்கலாக இறங்கி குத்திய “பத்த பத்தல” பாடல் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. இந்நிலையில் நாளை “விக்ரம்” திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகவிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Continue Reading

More in CINEMA

To Top