CINEMA
என்னடா பாட்டு இது?? இணையத்தில் வைரல் ஆகும் தாய் கிழவி பாடல்..
“திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தின் “தாய் கிழவி” பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கடந்த 1994 ஆம் ஆண்டு சரத்குமார், மீனா, கவுண்டமணி, பொன்னம்பலம் ஆகியோர் நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் “நாட்டாமை”. இத்திரைப்படத்தில் மனோரமாவின் கேரக்டரான தாய் கிழவி கேரக்டர் மிகவும் பிரபலமான ஒன்று.
இந்நிலையில் தனுஷ் நடிப்பில் வருகிற ஆகஸ்டு 18 ஆம் தேதி வெளியாக உள்ள “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தின் “தாய் கிழவி” Lyric பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
“தாய் கிழவி” பாடலின் வரிகளை “பொயட்டு” தனுஷ் எழுதியுள்ளார். இப்பாடலை தனுஷே பாடியும் உள்ளார். ஒரு கலர் ஃபுல் திருவிழா பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.
இப்பாடல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. “அது என்ன தாய்கிழவி?” என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும் அவர்கள் “நாட்டாமை” திரைப்படத்தின் பொன்னம்பலம், மனோரமா ஆகியோர் நடித்த காட்சிகளை மறுபடியும் தேடி சென்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வீடியோக்களின் கம்மெண்ட் பகுதியில் “After Dhanush song”, “Who are all after Dhanush thaai kelavi song?” என கம்மெண்ட் செய்து வருகின்றனர்.
இப்பாடல் வெளிவரவதற்கு முன்னமே படக்குழு ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தனர். அதில் “நாட்டாமை” திரைப்படத்தில் இடம்பெற்ற தாய் கிழவி காட்சி ஒன்றை அனிருத் பார்த்துக் கொண்டிருப்பார். அதன் பின் நடன இயக்குனர் சதீஷ் அவரிடம் வந்து தான் நடன இயக்குனராக பணியாற்றிய அந்த பாடலை குறித்து கேட்பார்.
அப்போது அனிருத் “தாய் கிழவி” என கூறுவார். உடனே அவருக்கு பின்புறம் “நாட்டாமை” திரைப்படத்தின் கெட் அப்பில் பொன்னம்பலம் தோன்றுவார். இவ்வாறு அந்த வீடியோ அமைந்திருந்தது.