CINEMA
தேவர் மகன் திரைப்படத்தில் விஜய் சேதுபதியா? ஆச்சரியமா இருக்குதே..
“தேவர் மகன் 2” திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக இணையத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1992 ஆம் ஆண்டு சிவாஜி கணேசன், கமல் ஹாசன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படம் தேவர் மகன். இன்று தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதைக்கு உதாரணமாக சொல்லும் திரைப்படங்களில் தேவர் மகனுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு. இத்திரைப்படம் ஆஸ்கார் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தேவர் மகன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது குறித்து எந்த தகவலும் பின்பு வெளிவரவில்லை.
இதனிடையே சமீபத்தில் “விக்ரம்” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில், விஜய் சேதுபதி “தேவர் மகன் 2” திரைப்படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளதாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.
“விக்ரம்” திரைப்படத்தில் சந்தனம் கதாப்பாத்திரத்தில் Drug lord ஆக விஜய் சேதுபதி வெறித்தனமான வில்லனாக நடித்திருப்பார். ஏற்கனவே விஜய் சேதுபதி பேட்ட, மாஸ்டர் ஆகிய திரைப்படங்களில் வில்லனாக கலக்கி இருக்கிறார். இந்நிலையில் தற்போது “தேவர் மகன் 2” திரைப்படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
‘விக்ரம்” திரைப்படம் தற்போது வரை வேர்ல்டு லெவல் பாக்ஸ் ஆஃபிஸில் சுமார் ரூ. 370 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது. இதனால் கமல் ஹாசனும் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கமல் ஹாசன் கேரியரிலேயே முக்கிய வெற்றித் திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமைந்துள்ளது. பல வருடங்கள் கழித்து கமல் ஹாசன் திரைப்படம் நன்றாக கல்லா கட்டியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.