CINEMA
நெகட்டிவிட்டியை எல்லாம் உடைத்து எரிந்து சாதனை படைத்த அண்ணாச்சி.. வேற லெவல்
லெஜண்ட் சரவணா நடித்த “தி லெஜண்ட்” திரைப்படம் எதிர்பாராவிதமாக கலெக்சனை அள்ளிக் குவித்து வருகிறது.
லெஜண்ட் சரவணா நடித்த “தி லெஜண்ட்” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பேன் இந்திய திரைப்படமாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் வெளியான “தி லெஜண்ட்” கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
உலக விஞ்ஞானியாக திகழும் சரவணன், தனது திறமைகள் எல்லாம் தன்னுடைய சொந்த கிராமத்திற்கு பயன்பட வேண்டும் என முடிவு செய்து அவரது கிராமத்திற்கு செல்கிறார். அங்கே பிறக்கும் குழந்தைகளுக்கே சக்கரை நோய் இருக்கிறது. இதனை எப்படியாவது சரிப்படுத்த வேண்டும் எனவும், மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து தர வேண்டும் எனவும் ஒரு புதிய மருந்தை கண்டுபிடிக்க முடிவு செய்கிறார் சரவணன்.
இதற்கு குறுக்கே வரும் வில்லன் சுமன், சரவணனின் முயற்சிகளை தடுக்கப் பார்க்கிறார். சரவணன் சுமனை தோற்கடித்தாரா? மக்களை காப்பாற்றினாரா? என்பதே “தி லெஜண்ட்” திரைப்படத்தின் கதை.
இத்திரைப்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி உள்ளனர். மேலும் ஊர்வசி ரதுலா, கீதிகா திவாரி, ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் ரோபோ ஷங்கர், மயில்சாமி, விவேக், தேவதர்ஷினி, யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இவ்வாறு இத்திரைப்படத்திற்கு பெரிய டீம் தான் பணியாற்றி உள்ளது.
இத்திரைப்படத்திற்கு ஆடியன்ஸ்கள் நெகட்டிவ் ரிவ்யூக்களே அளித்த வண்ணம் இருந்தனர். இதனால் இத்திரைப்படம் தோல்வியையே தழுவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த நெகட்டிவிட்டியை எல்லாம் தகர்க்கும் விதமாக உலகம் முழுவதும் ரூபாய் இரண்டு கோடியை அள்ளியுள்ளது.
அதாவது இது கங்கனா ரனாவத்தின் “தாகத்” திரைப்படத்தின் வசூலை விட அதிகம் எனவும் கூறப்படுகிறது.