CINEMA
விஜய்க்காக 5 கீபோர்டு உடைச்சிட்டேன்.. குதூகலத்தில் தமன்..
விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தை குறித்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார் இசையமைப்பாளர் தமன்.
விஜய் நடித்து வரும் “வாரிசு” திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரபு, பிரகாஷ் ராஜ், ஷ்யாம், சரத்குமார், குஷ்பு, யோகி பாபு, எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். விஜய் “வாரிசு” திரைப்படத்தில் ஒரு Application Designer ஆக வருகிறார் எனவும் விஜய்யின் கதாப்பாத்திரத்தின் பெயர் விஜய் ராஜேந்திரன் எனவும் ஒரு சமீபத்தில் ஒரு தகவல் வந்தது.
இந்நிலையில் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வரும் இசையமைப்பாளர் தமன் சமீபத்திய பேட்டி ஒன்றில் “வாரிசு” திரைப்படம் குறித்த பல சுவாரசியத் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
தமன் அப்பேட்டியில் “வாரிசு திரைப்படத்திற்கு இசையமைத்து 5, 6 கீபோர்டுகள் உடைந்துவிட்டது. வெகு நாட்கள் கழித்து விஜய் திரைப்படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. நல்ல எமோஷனலான ஆல்பமாக வாரிசு பாடல்கள் உருவாகி வருகிறது” என கூறினார்.
மேலும் பேசிய தமன் “நான், இயக்குனர் வம்சி, பாடலாசிரியர் விவேக் என எல்லாரும் விஜய்யின் ரசிகர்கள். ஆதலால் அந்த ரசிக வெறியில் வெறித்தனமாக வேலை செய்து வருகிறோம்” என கூறியுள்ளார்.
“வாரிசு” திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு Family Entertainer ஆக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
“வாரிசு” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. தெலுங்கில் “வாரசுடு” என்ற பெயரில் வெளிவருகிறது.
