Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“தளபதி 67” New Update!! யார் ஹீரோயின் தெரியுமா?

CINEMA

“தளபதி 67” New Update!! யார் ஹீரோயின் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ்-விஜய் கூட்டணியில் உருவாகும் “தளபதி 67” திரைப்படத்தின் கதாநாயகி குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் “பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது “தளபதி 66” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை வம்சி பைடப்பள்ளி இயக்கி வருகிறார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஷாம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

“தளபதி 66” திரைப்படம் முழுக்க முழுக்க Family entertainer என கூறப்படுகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“தளபதி 66” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜூடன் இணையவுள்ளார். லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே விஜய்யை வைத்து “மாஸ்டர்” என்ற வெற்றிப் படத்தை கொடுத்தவர். தற்போது மீண்டும் அந்த வெற்றிக் கூட்டணி இணையவுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் கதாநாயகி குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் சமந்தா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சமந்தா இதற்கு முன் விஜய்யுடன் “தெறி”, “மெர்சல்” போன்ற திரைப்படங்களில் ஜோடி சேர்ந்து உள்ளார். இதனை தொடர்ந்து “தளபதி 67” திரைப்படத்தில் மீண்டும் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் நடித்த “பீஸ்ட்” திரைப்படம் சரியாக போகவில்லை என்னும் நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளிவந்த “விக்ரம்” திரைப்படம் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அதே போல் லோகேஷ் கனகராஜும் விஜய்யும் இணைய உள்ள திரைப்படமும் மாஸ் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top