Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“தளபதி 66” படக்குழு வெளியிட்ட புகைப்படம்; தளபதி ஸ்டைல் சும்மா மெரட்டுது!!

CINEMA

“தளபதி 66” படக்குழு வெளியிட்ட புகைப்படம்; தளபதி ஸ்டைல் சும்மா மெரட்டுது!!

“தளபதி 66” படக்குழு  விஜய்யின் ஸ்டைல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

விஜய் நடிப்பில் உருவாகும் “தளபதி 66” திரைப்படம் பூஜை ஆரம்பித்த சூட்டோடே படப்பிடிப்பும் தொடங்கியது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்ததாக தகவல் வெளியானதை தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் “தளபதி 66” திரைப்படக்குழு ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அதில் விஜய் பின் பக்கம் திரும்பியவாறு மாஸ் ஆக காட்சி தருகிறார். அவர் முன் இயக்குனர் வம்சி பைடப்பள்ளி அவரிடம் ஒரு காட்சியை விவரிப்பது போல் தோன்றுகிறது.

இப்புகைப்படத்தை வெளியிட்ட படக்குழு “Schedule Wrap” என குறிப்பிட்டுள்ளனர். இத்திரைப்படம் வருகிற 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியாகவுள்ளது.

இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மாந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஷாம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். பாடல்கள் ஒலிப்பதிவு ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜூ, சிரிஷ் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

நடிகர் பிரகாஷ் ராஜ் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் “ஹாய் செல்லம்ஸ்ஸ்ஸ், வீ ஆர் back” என்று குறிப்பிட்டு “தளபதி 66” என்ற ஹேஷ் டேக்கை மென்ஷன் செய்திருந்தார். அது “தளபதி 66” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிய வந்தது. இந்நிலையி தற்போது “Schedule Wrap” என குறிப்பிட்டு படக்குழு மற்றொடு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top