CINEMA
தளபதி 66 New Update; டைட்டில் என்ன தெரியுமா?
விஜய் நடிப்பில் உருவாகி வரும் “தளபதி 66” திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் எப்போ ரிலீஸ் ன்னு தெரியுமா?
நடிகர் விஜய் தற்போது “தளபதி 66” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபு, சரத்குமார், யோகி பாபு, சங்கீதா, ஷாம், பிரகாஷ் ராஜ் என பலரும் நடிக்கின்றனர்.
நடிகர் விஜய் வருகிற ஜூன் 22 ஆம் தேதி தனது 48 ஆவது பிறந்நாளை கொண்டாடுகிறார். ஆதலால் விஜய் ரசிகர்கள் அனைவரும் குஷியோடு இருக்கின்றனர். இதற்கு முன்பை விட விமரிசையாக இந்த பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என ரசிகர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் பிறந்தநாள் அன்று “தளபதி 66” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. ஆம்!
அதாவது வருகிற 21 ஆம் தேதி மாலை 06.01 மணியளவில் “தளபதி 66” திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளிவர உள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்துள்ளது. இச்செய்தியை “தளபதி 66” திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனமே அறிவித்துள்ளது.
HE IS RETURNING…#Thalapathy66FLon21st #Thalapathy66
Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman @Cinemainmygenes @KarthikPalanidp pic.twitter.com/vXddUbOSzA
— Sri Venkateswara Creations (@SVC_official) June 19, 2022
“தளபதி 66” திரைப்படத்தை வம்சி பைடப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இத்திடைப்படத்திற்கு இசையமைக்கிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு, சிரிஷ் ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.
“தளபதி 66” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க Family entertainer ஆக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்போதும் விஜய் பிறந்தநாளுக்கு சிறப்பாக ஒரு Common DP வெளியிடப்படும். இந்த பிறந்தநாளிலும் விஜய்க்கு தரமான Common DP ஒன்று வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.