Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“தளபதி 66” திரைப்படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

CINEMA

“தளபதி 66” திரைப்படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

“தளபதி 66” திரைப்படத்தின் டைட்டில் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.

விஜய் தற்போது “பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து “தளபதி 66” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் சரத் குமார், ஷாம், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, பிரபு, சங்கீதா, ஜெயசுதா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

“தளபதி 66” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த வருடம் பொங்கலுக்கு “தளபதி 66” திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை வம்சி பைடப்பள்ளி இயக்கி வருகிறார். இவர் தெலுங்கில் பிரபலமான இயக்குனர். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். பாடல்கள் ஒலிப்பதிவு ஏற்கனவே நிறைவடைந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜூ, சிரிஷ் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டைட்டில் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது “தளபதி 66” திரைப்படத்திற்கு “வாரிசு” என பெயர் வைத்திருக்கிறார்களாம். தெலுங்கில் “வாரசுடு” என பெயர் வைத்திருக்கிறார்களாம்.

“தளபதி 66” திரைப்படம் ஒரு Family entertainer திரைப்படம் என பலர் கூறி வந்த நிலையில் “வாரிசு” என்ற டைட்டில் மிகவும் பொருத்தமாக இருப்பதாக இணையத்தில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் மகேஷ் பாபு வேறு கேமியோ ரோலில் வருகிறார் எனவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது திரைப்படத்திற்கு “வாரிசு” என பெயர் வைத்துள்ளதாக இணையத்தில் கசிந்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

தளபதி 66” திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ்ஜுடன் விஜய் இணைகிறார். “மாஸ்டர்” திரைப்படத்தை தொடர்ந்து இருவரும் மீண்டும் இணைகிறார்கள். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய “விக்ரம்” திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் விஜய்யுடன் இணையவுள்ள திரைப்படமும் தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top