CINEMA
“தளபதி 66” வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது..
“தளபதி 66” திரைப்படத்தின் வெறித்தனமான ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.
விஜய் நாளை தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில் இன்று “தளபதி 66” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது.
படத்திற்கு “வாரிசு” என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்போஸ்டரில் விஜய் கோட் சூட்டில் ஒரு பிசினஸ் மேக்னட் போல் வெறித்தனமாக தோற்றம் அளிக்கிறார். அவர் ஒரு மல்டி நேஷனல் கம்பெனியில் அமர்ந்திருப்பது போல் உள்ளது.
இதன் மூலம் இத்திரைப்படத்தில் விஜய் ஒரு பிசினஸ் மேனுக்கு வாரிசாக நடிக்கிறார் என வியூகிக்க முடிகிறது. ஏற்கனவே தந்தை-மகன் பாசத்தை அடிப்படையாக வைத்து திரைப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அதை ஊர்ஜிதப்படுத்துவது போல் இப்போஸ்டர் வெளியாகி உள்ளது.
“வாரிசு” திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் பிரபு, சரத்குமார், யோகி பாபு, சங்கீதா, ஷாம், பிரகாஷ் ராஜ் என பலரும் நடித்து வருகின்றனர்.
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கி வருகிறார். தமன் இசையமைக்கிறார். இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவர உள்ளது.
நடிகர் விஜய் நாளை தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் விஜய் ரசிகர்கள் அனைவரும் குஷியோடு இருக்கின்றனர். இதற்கு முன்பை விட விமரிசையாக இந்த பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என ரசிகர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய் பிறந்தநாள் அன்று “தளபதி 66” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.