Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“தளபதி 66” விக்ரமன் படமா? கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்..

CINEMA

“தளபதி 66” விக்ரமன் படமா? கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்..

“தளபதி 66” திரைப்படம் விக்ரமன் இயக்கிய திரைப்படம்? என இணையவாசிகள் கேலியாக கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

பீஸ்ட்” திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் “தளபதி 66” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் வம்சி பைடப்பள்ளி இயக்குகிறார். இப்படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன் நடந்த வேகத்தில், முதல் கட்ட படப்பிடிப்பு உடனே தொடங்கியது. சில நாட்களுக்குள் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.

இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தை இணையவாசிகள் விக்ரமன் திரைப்படமா என கலாய்க்கிறார்கள். ஏன் தெரியுமா?

இத்திரைப்படத்தில் கதாநாயகியான ராஷ்மிகாவை தொடர்ந்து நிறைய நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தன. அதாவது சரத்குமார் இத்திரைப்படத்தில் நடிக்கவுள்ளது பட அறிவிப்பு வந்த போதே தெரிந்திருந்தாலும், அதன் பிறகு பிரகாஷ் ராஜ் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ரசிகர்கள் அடடா! போட்டனர். அதன் பிறகு பிரபு இணைவதாக அறிவிப்பு வந்தது. “ஓ இவரும் இருக்கிறாரா?” என கமெண்ட்கள் வந்தன. அதனை தொடர்ந்து ஷாம் இணைவதாக அறிவிப்பு வந்தது. “இவரும் இருக்கிறாரா?” என்று ஆச்சரியப்பட்டனர்.

ஷாமை தொடர்ந்து காமெடி நடிகர் யோகி பாபு இணைவதாக அறிவிப்பு வந்தது. “அடேங்கப்பா, இன்னும் எத்தனை பேர் தான் இத்திரைப்படத்தில் நடிக்கின்றனர்?” என “ஆ” போட்டனர்.

அதனை தொடர்ந்து நடிகை ஜெயசுதா, சங்கீதா, ஸ்ரீகாந்த் என அறிவிப்பு வந்து கொண்டே இருந்தது. “இதென்ன இத்தன பேர் நடிக்கிறார்கள்?” என்று ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. மேலும் “ஒரு வேளை விக்ரமன் படமான வானத்தை போல திரைப்படம் போல் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்பது போல் “தளபதி 66” திரைப்படத்தில் ஒரு பாடல் இடம்பெறுமோ என இணையவாசிகள் இணையத்தில் கலாய்த்து தள்ளுகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top