CINEMA
“யார் அந்த தமிழ் ராக்கர்ஸ்…?” எப்படியாவது கண்டுபிடிங்க?
தமிழ் ராக்கர்ஸை பிடிக்க விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள அருண் விஜய்?
அருண் விஜய் நடிப்பில் மூன்று நாட்களுக்கு முன் வெளியான “யானை” திரைப்படம் மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. காதல், ஆக்சன், சென்டிமன்ட் என கலந்து கட்டி ஒரு பக்கா கமர்சியல் திரைப்படத்தை மக்கள் ரசிக்கும்படியாக எடுத்திருப்பதாக இயக்குனர் ஹரியை பாராட்டி வருகின்றனர்.
குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக “யானை” திரைப்படம் அமைந்திருப்பதாக பலர் கூறி வருகின்றனர். ஹரி திரைப்பட பாணியில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதையுடன் பார்வையாளர்களை எங்கேஜ் செய்துள்ளதாக சிலர் கூறி வருகின்றனர்.
திரைப்படத்தில் நடித்த பிரியா பவானி ஷங்கர், அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார், சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோர் தங்களது கதாப்பாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது அருண் விஜய் நடிப்பில் உருவான “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரீஸின் டீசர் வெளிவந்துள்ளது. அதில் தமிழ் ராக்கர்ஸ் யார்? என்பதை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் வருகிறார் என தெரிய வருகிறது.
இந்த வெப் சீரீஸை அறிவழகன் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன் “ஈரம்”, “வல்லினம்”, “ஆறாது சினம்”, “குற்றம் 23” ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார்.
“தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரீஸில் அருண் விஜய்யுடன் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி, ஜி மாரிமுத்து, தருண் குமார், வினோத் சாகர் ஆகிய பலரும் நடித்துள்ளனர். இந்த வெப் சீரீஸை பிரபல ஏவிஎம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏவிஎம் தயாரிக்கும் முதல் வெப் சீரீஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெப் சீரீஸ் கூடிய விரைவில் “சோனி லைவ்” ஓடிடி தளத்தில் வெளிவர உள்ளது.
