Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“Give Respect, Take respect”… பளீர் பதிலால் பத்திரிக்கையாளரை வெளுத்து வாங்கிய டாப்ஸி

CINEMA

“Give Respect, Take respect”… பளீர் பதிலால் பத்திரிக்கையாளரை வெளுத்து வாங்கிய டாப்ஸி

மரியாதை குறைவாக பேசிய பத்திரிக்கையாளரை வெளுத்து வாங்கிய டாப்சி. என்ன விஷயம் தெரியுமா?

தமிழில் “ஆடுகளம்”, “வந்தான் வென்றான்”, “கேம் ஓவர்” போன்ற திரைப்படங்களில் நடித்த டாப்சி, தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்திருந்தாலும் பாலிவுட்டில் தனது மார்க்கெட்டை செமத்தியாக தக்கவைத்துக்கொண்டார் டாப்ஸி. “பிங்க்”, “நாம் ஷாபனா”, “மல்க்”, “மன்மர்ஸியான்”, “தப்பட்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டத்தையே அமைத்துக்கொண்டார்.

முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்ஜின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுத்த “சபாஷ் மித்து” திரைப்படத்தில் மிதாலி ராஜ்ஜாக நடித்திருந்தார் டாப்ஸி. இத்திரைப்படம் கடந்த மாதம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த நிலையில் தற்போது “டோபாரா” என்ற திரைப்படத்தில் டாப்ஸி நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற 19 ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படத்தை முன்னிட்டு டாப்ஸி புரோமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் டாப்ஸி கலந்துகொண்டார். அப்போது இரண்டு மணி நேரமாக அவரை படம்பிடிக்க புகைப்பட பத்திரிக்கையாளர் ஒருவர் காத்திருந்திருக்கிறார். டாப்ஸி நிகழ்ச்சிக்கு வந்தவுடன் அவர் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கவில்லை என தெரியவருகிறது.

இதனை தொடர்ந்து அந்த புகைப்பட பத்திரிக்கையாளருக்கும் அவருக்கும் விவாதம் ஏற்பட்டதாக தெரியவருகிறது. புகைப்பட கலைஞர் டாப்ஸியிடம் “ஏன் தாமதமாக வருகிறீர்கள்?” என கேட்டார் எனவும் அதற்கு டாப்ஸி “நான் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியாகத் தான் வருகிறேன். நீங்கள் மரியாதையாக பேசினால் நானும் மரியாதையாக பேசுவேன்” என கூறியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த வீடியோவை “பிங்க் வில்லா” என்ற செய்தி இணையத்தளம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Continue Reading

More in CINEMA

To Top