CINEMA
டி. ராஜேந்தர் இப்படி ஆயிட்டாரே பாவம்!!
சிம்பு தனது தந்தையுடன் வெளியிட்ட புகைப்படத்தில் டி. ராஜேந்தரின் தோற்றம் பலவீனமாக இருப்பதாக ரசிகர்கள் தங்கள் கவலைகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழின் முன்னணி நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்தர் சமீபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் சில நாட்களாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் டி. ராஜேந்தரை மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல உள்ளதாக தகவல்கள் வந்தன.
எனினும் அதன் பின் அமெரிக்காவிற்கு மேல் சிகிச்சைக்காக செல்ல உள்ளதாக செய்திகள் தெரிவித்தன. இந்நிலையில் தற்போது சிம்புவுடன் டி. ராஜேந்தர் இருக்கும் ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் டி. ராஜேந்தர் மிகவும் பலவீனமாக காணப்படுகிறார்.
சிகிச்சை பெற்று நலமோடு இருக்கிறார் என தகவல்கள் தெரிய வந்தாலும் புகைப்படத்தில் மிகவும் பலவீனமாக தென்படுவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்புகைப்படம் இதோ..
டி. ராஜேந்தர் 1980-களில் தமிழின் முன்னணி நடிகரும் இயக்குனருமாக திகழ்ந்தவர். அது மட்டுமல்லாது படத்தொகுப்பு, இசை, நடன இயக்குனர் என பல ரூபங்களையும் எடுப்பவர். பெரும்பாலான அவரது திரைப்படங்கள் தங்கை அண்ணன் பாசத்தை பேசக்கூடியதாக இருக்கும்.
“தங்கைக்கு ஓர் கீதம்”, “என் தங்கை கல்யாணி”, “தாய் தங்கை பாசம்” போன்ற திரைப்படங்கள் தங்கை அண்ணன் பாசத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய திரைப்படம். அதே போல் காதலை கொண்டாடக்கூடிய பல திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
“ஒரு தலை ராகம்”, “மைதிலி என்னை காதலி”, “மோனிஷா என் மோனலிசா”, “சொன்னால் தான் காதலா”, “காதல் அழிவதில்லை” என பல வெற்றியடைந்த காதல் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். இவரின் வசனங்கள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக ரைமிங்கில் பேசும் பல வசனங்கள் இன்றளவும் பேசப்படுபவை.
