CINEMA
மீண்டும் ரைமிங்கில் கலக்கும் டி. ராஜேந்தர்? வெளியான வீடியோவை பாருங்க..
டி. ராஜேந்தர் சிகிச்சை முடித்து விட்டு மீண்டும் தனது ஸ்டைலில் ரைமிங்கில் கலக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழின் முன்னணி நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்தர் சமீபத்தில் உடல் நிலை பாதிக்கப்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் சில நாட்களாக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் டி. ராஜேந்தரை மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்ல உள்ளதாக தகவல்கள் வந்தன.
எனினும் அதன் பின் அமெரிக்காவிற்கு மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து டி. ராஜேந்தர் சிகிச்சை பெற்று நலமோடு இருப்பதாக சில புகைப்படங்கள் வெளிவந்தன.
இந்நிலையில் தற்போது டி. ராஜேந்தர் மீண்டும் தனது ஸ்டைலில் ரைமிங்காக பேசிய வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. நியூ யார்க்கில் சென்று அவரது உடல் நலத்தை குறித்து நேரில் விசாரித்த பாண்டியராஜனும் நெப்போலியனும் அந்த வீடியோவில் தென்படுகிறார்கள்.
அதில் டி. ராஜேந்தர் வேற லெவலில் ரைமிங்கில் கலக்குகிறார். இந்த வீடியோ மூலம் டி. ராஜேந்தர் உடல் நலம் தேறி நன்றாக இருக்கிறார் என தெரிய வருகிறது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
#TRajendar latest video pic.twitter.com/NwOcvWn5zg
— Parthiban A (@ParthibanAPN) July 4, 2022
டி. ராஜேந்தர் 1980-களில் தமிழின் முன்னணி நடிகரும் இயக்குனருமாக திகழ்ந்தவர். அது மட்டுமல்லாது படத்தொகுப்பு, இசை, நடன இயக்குனர் என பல ரூபங்களையும் எடுப்பவர். பெரும்பாலான அவரது திரைப்படங்கள் தங்கை அண்ணன் பாசத்தை பேசக்கூடியதாக இருக்கும். இவரின் வசனங்கள் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக ரைமிங்கில் பேசும் பல வசனங்கள் இன்றளவும் பேசப்படுபவை.
