Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“விக்ரம்” அப்டேட்.. வெளியான சூர்யாவின் நியூ லுக்…

CINEMA

“விக்ரம்” அப்டேட்.. வெளியான சூர்யாவின் நியூ லுக்…

“விக்ரம்” திரைப்படத்தில் நடித்த சூர்யாவின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் நடிப்பில் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ள திரைப்படம் “விக்ரம்”. இத்திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் டிரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து பட்டையை கிளப்பியது. ஹாலிவுட் திரைப்படத்திற்கு இணையான ஒரு திரைப்படமாக “விக்ரம்” திரைப்படம் அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“விக்ரம்” திரைப்படத்தில் இடம்பெற்ற “பத்தல பத்தல” lyric பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து சக்கை போடு போட்டது. கமல் ஹாசன் குரலில் சும்மா தர லோக்கலாக இறங்கி குத்தியிருக்கிறார் என பலர் குதூகலத்தில் பாராட்டி வந்தனர்.

அதன் பின் சமீபத்தில் “போர் கொண்ட சிங்கம்” lyric பாடல் வெளியாகி ரசிகர்களை உருக வைத்தது. அதில் இடம்பெற்ற வரிகள் அனைத்தும் மகனை பற்றி தந்தை பாடும் விதமாக அமைந்தது. அதன் பின் “Wasted” பாடலின் lyric வீடியோவும் வெளியாகி பட்டையை கிளப்பியது.

இத்திரைப்படத்திற்கான Booking தற்போது தீயாக நடந்து வருகிறது. வருகிற ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகள் திருவிழா போல் காட்சித் தரும் என்பது உறுதியாக தெரிகிறது. இதனிடையே “விக்ரம்” திரைப்படத்தில் சூர்யா நடித்திருப்பதாக தகவகள் வெளியானது. இதனை “விக்ரம்” திரைப்படத்தின் ஆடியோ லாஞ்சில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உறுதி செய்தார்.

இதனை தொடர்ந்து பலரும் இணையத்தில் டிரைலரில் சூர்யா எங்கிருக்கிறார் என decode செய்து வந்தனர். இந்நிலையில் சில நேரங்களுக்கு முன் “விக்ரம்” திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் சூர்யா வித்தியாசமான தோற்றத்தில் இடம்பெற்றிருக்கிறார். இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top