CINEMA
கைதி 2 திரைப்படத்தில் சூர்யா? வெளியான புதிய தகவல்
“கைதி 2” திரைப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “கைதி”. இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இத்திரைப்படத்தின் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் பார்வையாளர்களை “ஓ” போட வைத்தது.
அது மட்டும் அல்லாது கார்த்திக்கும் அவரது மகளுக்குமான சென்டிமன்ட் காட்சிகள் மனதை உருக வைப்பதாக இருந்தன. “கைதி திரைப்படம் வெளிவந்த பிறகு இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் “கைதி” திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு, “கார்த்தியும் லோகேஷ் கனகராஜும் ஒத்துழைத்தால் கைதி இரண்டாம் பாகம் சாத்தியம்” என முன்பு கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இரண்டாம் பாகத்திற்கான உருவாக்கத்திற்கு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது “கைதி” இரண்டாம் பாகத்தில் கார்த்தியுடன் சூர்யா இணையவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இரண்டு பெரிய ஸ்டார்கள் நடிக்கவுள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
கைதி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோரின் நடிப்பில் உருவாகிய “விக்ரம்” திரைப்படத்தை இயக்கியுள்ளார். லோகேஷ்-கமல் கூட்டணி மாஸாக கலக்கப்போவது உறுதி என ரசிகர்கள் வெயிட்டிங்கில் வெறியேறி கிடக்கிறார்கள்.
அதே போல் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் என மாஸ் ஹீரோக்களின் கூட்டணி வேறு. படம் வெளியாகும் நாளில் நிச்சயம் திருவிழா தான் என ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். “விக்ரம்” திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.