Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

“கோபமாக வெளியேறிய சூர்யா”?? பாலா படப்பிடிப்பில் அதிர்ச்சி..

CINEMA

“கோபமாக வெளியேறிய சூர்யா”?? பாலா படப்பிடிப்பில் அதிர்ச்சி..

இயக்குனர் பாலா நடிகர் சூர்யாவை வைத்து இயக்கிவரும் “சூர்யா 41” திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து சூர்யா கோபமாக வெளியேறியதாக? செய்திகள் உலா வருகின்றன.

இயக்குனர் பாலா நடிகர் விக்ரமை வைத்து இயக்கிய முதல் படமான “சேது” மாபெரும் ஹிட் ஆனது. அதன் பிறகு அவர் நடிகர் சூர்யாவை வைத்து “நந்தா” என்ற திரைப்படத்தை இயக்கினார். “நந்தா” திரைப்படம் சூர்யாவை சிறந்த நடிகராக வெளிப்படுத்தியது.

அதில் இருந்து சூர்யா-பாலா இருவரின் நட்பும் நெருக்கமானது. அதனைத் தொடர்ந்து விக்ரம்-சூர்யா காம்போவை வைத்து “பிதாமகன்” என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன் பின் “நான் கடவுள்” “அவன்-இவன்” “பரதேசி” “தாரை தப்பட்டை” “நாச்சியார்” போன்ற திரைப்படங்களை இயக்கிய பாலாவிற்கு சூர்யாவை வைத்து இயக்கும் வாய்ப்பு மீண்டும் அமையவில்லை.

மேலும் தெலுங்கில் வெளிவந்து மாஸ் ஹிட் ஆன “அர்ஜூன் ரெட்டி”திரைப்படத்தை தமிழில் துருவ் விக்ரமை வைத்து இயக்கினார் பாலா. ஆனால் அத்திரைப்படம் சில காரணங்களால் திரையரங்குகளில் வெளிவரவில்லை.

சில நாட்களுக்கு முன்பு சூர்யாவின் 41 ஆவது திரைப்படத்தை பாலா இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளிவந்தது. மேலும் அத்திரைப்படத்தில் கீரீத்தி ஷெட்டி ஜோடியாக நடிக்கிறார் என்ற தகவலும் வெளியானது. இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்நிலையில் இன்று காலை பாலாவுடன் விவாதம் ஏற்பட்டு சூர்யா படப்பிடிப்பில் இருந்து கோபமாக வெளியேறிவிட்டார் என்ற செய்தி இணையத்தில் வலம் வந்து கொண்டிருந்தது. ஆனால் “இது உண்மையல்ல, படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட படபிடிப்பு வருகிற ஜூன் மாதத்தில் கோவாவில் நடைபெறுகிறது” என அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து பேசியதாக செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் படப்பிடிப்பில் இருந்து சூர்யா வெளியேறினார் என்ற செய்தி வதந்தி என தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top