CINEMA
யாரையும் வணங்காத சூர்யா… வெளியானது பாலா படத்தின் டைட்டில் ….
பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படத்தின் டைட்டில் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
நடிகர் சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இது சூர்யாவின் 41 ஆவது திரைப்படமாகும். தற்போது இத்திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது. அப்போஸ்டர் இதோ..
இன்று இயக்குனர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்போஸ்டர் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்திற்கு “வணங்கான்” என பெயர் வைத்துள்ளனர். இத்திரைப்படத்தை 2D என்டெர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா-ஜோதிகா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். இதில் சூர்யாவுடன் கிரீத்தி ஷெட்டி நடிக்கிறார். கிரீத்தி ஷெட்டி அறிமுகமாகும் முதல் நேரடி தமிழ் திரைப்படம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
“வணங்கான்” திரைப்படத்தின் போஸ்டரில் ஒரு திரைத் துணியை கிழித்துக் கொண்டு சூர்யா பார்ப்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சூர்யா டெரிஃபிக் லுக்கில் டெரராக இருக்கிறார்.
பாலா திரைப்படங்கள் எல்லாம் சாதாரண மனிதர்களின் வாழ்வியலை அடிப்படையாக வைத்து தான் கதையம்சம் அமையும். அதே போல் இத்திரைப்படமும் இருக்கும் என வியூகிக்க முடிகிறது.
“வணங்கான்” திரைப்படத்திற்கு ஜி வி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஜி வி பிரகாஷ் இதற்கு முன் பாலா இயக்கத்தில் “பரதேசி”, “நாச்சியார்” ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். “நாச்சியார்: திரைப்படத்தில் நடித்தும் உள்ளார்.
பாலா இதற்கு முன் சூர்யாவை வைத்து இயக்கிய “நந்தா” திரைப்படம் மாபெரும் ஹிட் ஆனது. அத்திரைப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் திருப்பு முனையாகவும் அமைந்தது. அதே போல் “வணங்கான்” திரைப்படமும் மாபெரும் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலா சமீபத்தில் அர்ஜூன் ரெட்டி ரீமேக்கான “வர்மா” திரைப்படத்தை இயக்கினார். ஆனால் அத்திரைப்படம் சில காரணங்களால் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இந்நிலையில் தற்போது “வணங்கான்” திரைப்படம் பாலாவுக்கு மிகப் பெரும் ஹிட் திரைப்படமாக அமைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.