CINEMA
ஆஸ்கார் கமிட்டியில் முதல் தமிழர்; சூர்யாவிற்கு வந்த அழைப்பு..
ஆஸ்கார் கமிட்டியில் முதல் தமிழர் என்ற சிறப்பை பெற உள்ளார் நடிகர் சூர்யா.
சூர்யா இதற்கு முன் பல ஹிட் படங்களை அளித்திருந்தாலும் “ஜெய் பீம்” திரைப்படம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது. மேலும் அத்திரைப்படம் பல விருதுகளையும் பெற்றது.
அதாவது “ஜெய் பீம்” திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. அதே போல் திரைப்படத்தில் ராஜாகண்ணுவாக நடித்த மணிகண்டனுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் அறிவிக்கப்ப்பட்டது.
அதே போல் சர்வதேச அளவில் போஸ்டான் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த கதாநாயகிக்கான விருது லிஜோமோல் ஜோஸுக்கும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது எஸ். ஆர். கதிருக்கும் அறிவிக்கப்பட்டது.
நடிகர் சூர்யா சமீபத்தில் “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அத்திரைப்படம் சரியாக எடுபடவில்லை. எனினும் “விக்ரம்” திரைப்படத்தில் ரோலக்ஸாக நடித்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
“ரோலக்ஸ்” கதாப்பாத்திரத்தின் வரவேற்பை பார்த்து குஷியான தயாரிப்பாளர் கமல் ஹாசன், சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச்சை பரிசாக அளித்த சம்பவமும் நடந்தது.
இந்நிலையில் சூர்யாவிற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக ஆஸ்கார் விருது அமைப்பு ஒன்றை செய்துள்ளது. அதாவது ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக இணைய சூர்யாவிற்கு அழைப்பு வந்துள்ளது. மேலும் ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக இணையவுள்ள முதல் தமிழர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார் சூர்யா.
ஆஸ்கார் அகாடமியின் உறுப்பினராக இணைய உலகம் முழுவதும் 397 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டடுள்ளது. அதில் சூர்யாவும் ஒருவர். அதே போல் பாலிவுட் நடிகை கஜோலுக்கும் ஆஸ்கார் அகாடமியில் உறுப்பினராக இணைய அழைப்பு வந்துள்ளது.
சூர்யா நடித்த “ஜெய் பீம்” திரைப்படமும் ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.