Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

சிறுத்தை சிவா-சூர்யா இணையும் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்..

CINEMA

சிறுத்தை சிவா-சூர்யா இணையும் படத்திற்கு இவர் தான் இசையமைப்பாளர்..

சிறுத்தை சிவா சூர்யாவை வைத்து இயக்கும் புதிய திரைப்படத்தின் இசையமைப்பாளர் குறித்து ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது.

இயக்குனர் சிவா “சிறுத்தை, “ வேதாளம்”, “வீரம்”, “விவேகம்”, விஸ்வாசம்” என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்தவர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து “அண்ணாத்த” என்ற திரைப்படத்தை இயக்கினார்.

ஆனால் அத்திரைப்படம் சரியாக எடுபடவில்லை. “அண்ணாத்த” திரைப்படம் பொருளாதார வெற்றியை பெற்றிருந்தாலும் ரசிகர்களுக்கு திருப்தியை கொடுக்கவில்லை. எங்கு திரும்பினாலும் நெகட்டிவ் ரிவ்யூக்களே வந்தன.

இதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. சமீபத்தில் அத்திரைப்படம் ட்ராப் ஆகிவிட்டது என்றும் வதந்தி பரவியது.

எனினும் அத்திரைப்படம் ட்ராப் ஆகவில்லை எனவும், அத்திரைப்படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க சிறுத்தை சிவா திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது இத்திரைப்படம் குறித்து ஒரு மாஸ் அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படத்திற்கு இசையமைக்க உள்ளது யார்? என்பது குறித்தான ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது இத்திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர் இதற்கு முன் சூர்யா நடித்த “மாயாவி”, “ஆறு”, “சிங்கம் 1”, “சிங்கம் 2” ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து தற்போது 5 ஆவது முறையாக தேவி ஸ்ரீ பிரசாத் சூர்யாவுடன் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் கூட இத்திரைப்படம் குறித்து ஒரு மாஸ் அப்டேட் வெளிவந்தது. அதாவது இத்திரைப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வந்தன. மேலும் தந்தை-மகன் பாசத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. தந்தை, மகன் என்ற இரு வேடங்களிலும் சூர்யாவே நடிக்க உள்ளதாக வியூகிக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top