CINEMA
திரையுலகிலேயே அதிக சம்பளம் வாங்கப்போகும் நடிகை இனி நயன்தாரா தான்.. எவ்வளவு கோடி தெரியுமா?
தென்னிந்திய திரையுலகிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை இனி நயன்தாரா தான். தனது புதிய திரைப்படத்திற்கு எவ்வளவு கோடி சம்பளம் நிர்ணயித்துள்ளார் தெரியுமா?
நயன்தாரா தென்னிந்தியாவின் டாப் நடிகைகளுள் ஒருவர். மேலும் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டமும் உண்டு. நயன்தாரா தனது திரைப் பயணத்தை தொடங்கிய போதே வெற்றி தான். தமிழில் தனது இரண்டாவது திரைப்படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்தார். அதன் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு என டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்த நயன்தாரா நடுவில் சில காதல் பிரச்சனைகளில் சிக்கி சர்ச்சைக்குள்ளானார்.
அதன் பின் “நயன்தாரா அவ்வளவு தான்” என பலரும் கூறினர். ஆனால் அந்த பேச்சுக்களை எல்லாம் உடைக்கும் வகையில் தொடர்ந்து பல திரைப்படங்களில் ரீ என்ட்ரி கொடுத்து முன்னணி நடிகையாக வளர்ந்தார். இப்போது தென்னிந்தியாவில் நயன்தாராவை அடிச்சிக்க ஆள் இல்லை என்ற நிலையில் இருக்கிறார்.
நயன்தாரா பல வருடங்கள் காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் கரம் பிடித்தார். தற்போது அட்லி இயக்கி வரும் பாலிவுட் திரைப்படத்தில் ஷாருக் கானுடன் நடித்து வருகிறது.
அதன் பின் நயன்தாரா தனது 75 ஆவது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அத்திரைப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்க உள்ளார். இந்நிலையில் நயன்தாரா இத்திரைப்படத்திற்கு அதிக சம்பளம் நிர்ணயித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாரா இதற்கு முன் 7 முதல் 8 கோடி வரை வாங்கி வந்தார். ஆனால் தற்போது பாலிவுட் திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில் தனது 75 ஆவது திரைப்படத்திற்கு 10 கோடி சம்பளமாக உயர்த்தியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.