CINEMA
“SK 20 NEW UPDATE”… ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த படக்குழு
சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படமான “SK 20” திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த “டான்” திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸில் 100 கோடிக்கும் மேல் அள்ளிக் கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து “SK 20” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
“SK 20” திரைப்படத்தை அனுதீப் கே. வி. இயக்கி வருகிறார். இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுடன் மரியா, சத்யராஜ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் “SK 20” திரைப்படத்தை பற்றிய புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இத்திரைப்படம் வருகிற ஆகஸ்டு மாதம் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
Team #SK20✨Congratulates Hero @Siva_Kartikeyan for the Blockbuster Success of #DON 🤩
The Fun Filled Tale 🕊 is ready to fly high in cinemas from 31st August 2022❤️
First Look & Other Updates Landing 🔜💫@anudeepfilm #MariaRyaboshapka @MusicThaman #SK20fromAugust31 pic.twitter.com/L1WMOg4pFU
— Sree Venkateswara Cinemas LLP (@SVCLLP) May 30, 2022
“SK 20” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவரவுள்ளது. மேலும் இத்திரைப்படம் ஒரு Fun-family entertainer ஆக உருவாகி வருவதாக திரைப்படக்குழு தெரிவித்துள்ளது. இத்திரைப்படத்தின் First look மற்றும் மற்றைய அப்டேட்டுகள் விரைவில் வெளிவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதனை தொடர்ந்து ‘SK21” திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இத்திரைப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார். மேலும் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுடன் ஜோடியாக இணைகிறார்.
அதே போல் “SK 22” திரைப்படத்தை “மண்டேலா” என்ற திரைப்படத்தை இயக்கிய மடோன்னே அஸ்வின் இயக்குவதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கெயிரா அத்வானி நடிக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு பல திரைப்படங்களை கையில் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு “SK 20” திரைப்படம் வெளிவரவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது