CINEMA
சிவகார்த்திகேயனுக்கு தங்கச்சியாக நடிக்கப் போவது இந்த யூட்யூப் பிரபலம் தான்??
“மாவீரன்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்க இருப்பவர் குறித்த சுவாரசியமான அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது.
“மண்டேலா” இயக்குனர் மடோன்னே அஸ்வின் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வரும் “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.
“மாவீரன்” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகிறது. தெலுங்கில் “மஹாவீருடு” என்ற பெயரில் இத்திரைப்படம் வெளிவருகிறது. இத்திரைப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். விது அய்யன்னா இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் . “சாந்தி டாக்கீஸ்” அருண் விஸ்வா இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் “மாவீரன்” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்க உள்ளவர் குறித்த ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பான “கலக்கப்போவது யாரு” சீசன் 8-ல் கலந்து கொண்டு பிரபலம் ஆன மோனிஷா பிளெஸ்ஸி இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
மோனிஷா பிளெஸ்ஸி பிரபல யூட்யூபரும் கூட. “பிளாக் ஷீப்” என்ற பிரபல யூட்யூப் சேன்னலில் பல காணொளிகள் தென்படுவார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “பிரின்ஸ்” திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகிறது. இத்திரைப்படத்தை அனுதீப் கே வி இயக்கி உள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மரியா என்ற ஆங்கிலேய நடிகை நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜும் நடித்துள்ளார். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அதே போல் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல் ஹாசன் சோனி பிக்சர்ஸுடன் இணைந்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். இதில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி ஜோடி சேர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.