Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

வெளியானது சிவகார்த்திகேயனின் “பிம்பிலிக்கி பிலாப்பி” கிளிம்ப்ஸ்…

CINEMA

வெளியானது சிவகார்த்திகேயனின் “பிம்பிலிக்கி பிலாப்பி” கிளிம்ப்ஸ்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான “பிரின்ஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற “பிம்பிலிக்கி பிலாப்பி” பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் அனுதீப் கே. வி. இயக்கத்தில் வருகிற தீபாவளி அன்று வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் “பிரின்ஸ்”. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன், மரியா என்ற ஆங்கிலேயர் ஜோடியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

“பிரின்ஸ்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதில் கையில் உலக உருண்டையுடன் சிவகார்த்திகேயன் தென்பட்டார். அவருக்கு கீழே பல நாட்டு வண்ணக் கொடிகளை கைகளில் வரைந்தவாறு பல கைகள் தென்பட்டன. அவருக்கு பின்னே சமாதான புறா பறக்கிறது. இதனை வைத்து பார்க்கும் போது இது உலக அமைதி குறித்து பேசும் திரைப்படமாக இருக்கலாம் என வியூகிக்கப்படுகிறது.

“பிரின்ஸ்” திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது. இந்த நிலையில் தற்போது “பிரின்ஸ்” திரைப்படம் குறித்த ஒரு புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.

அதாவது இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “பிம்பிலிக்கி பிலாப்பி” என்ற பாடல் இன்று மாலை 4.05 மணிக்கு வெளியாகிறது. இதனை முன்னிட்டு தற்போது இந்த பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. தமன் இசையில் ஒரு பெப்பி சாங்காக இப்பாடல் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் தற்போது “மாவீரன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை “மண்டேலா” இயக்குனர் மடோனே அஸ்வின் இயக்கி வருகிறார். அதிதி ஷங்கர் இதில் ஜோடியாக நடிக்கிறார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகிறது.

“மாவீரன்” திரைப்படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமியுடன் சிவகார்த்திகேயன் கைக்கோர்க்கிறார். இத்திரைப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார். சாய் பல்லவி கதாநாயகியாக இணைகிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top