CINEMA
சிவகார்த்திகேயன் படத்தின் போஸ்டர் இதோட காப்பி தானா? இணையத்தில் சர்ச்சை
சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படத்தின் போஸ்டர் இதோட காப்பி தான் என இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.
சிவகார்த்திகேயனின் புதிய திரைப்படமான “பிரின்ஸ்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளிவந்தது. இத்திரைப்படதை அனுதீப் கே. வி. இயக்கியுள்ளார். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
“பிரின்ஸ்” திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படம் வருகிற ஆகஸ்டு மாதம் 31 ஆம் தேதி வெளிவர உள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சிவகார்த்திகேயன் கையில் உலக உருண்டையை வைத்துக் கொண்டு தென்படுகிறார். அவருக்கு பின் சமாதான புறா ஒன்று பறக்கிறது. அவருக்கு கீழே பல கைகள் தென்படுகின்றன. அந்த கைகளில் பல நாட்டுக் கொடிகள் வரையப்பட்டுள்ளன.
பல நாட்டுக் கொடிகள் வரையப்பட்ட கைகள் ஒரு விழாவிற்கு வெளியிட்ட போஸ்டரின் காப்பி என கூறப்படுகிறது. அதாவது “International Flag party” என்ற விழாவில் வெளியிட்ட போஸ்ட்டரின் காப்பி தான் என பலர் அந்த புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ..
இப்புகைப்படத்தை பகிர்ந்து பலரும் கமென்ட் செய்து வருகின்றனர். இத்திரைப்படம் உலக அமைதியை வலியுறுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் போஸ்டர் காப்பி என இணையத்தில் சர்ச்சை எழுந்துள்ளது.
“பிரின்ஸ்” திரைப்படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமியுடன் சிவகார்த்திகேயன் கைக்கோர்க்கிறார். இத்திரைப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார். சாய் பல்லவி கதாநாயகியாக இணைகிறார். அதனை தொடர்ந்து “மண்டேலா” திரைப்பட இயக்குனர் மடோன்னே அஸ்வினுடன் சிவகார்த்திகேயன் கைக்கோர்க்கிறார். அத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கெயிரா அத்வானி கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.