CINEMA
வெறித்தனமாக பவுலிங் போட்ட சிவகார்த்திகேயன்… வைரல் வீடியோ
சிவகார்த்திகேயன் அவரது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சிவகார்த்திகேயன் பல திரைப்படங்களை கைக்குள் வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் அனுதீப் கே வி இயக்கிய “பிரின்ஸ்” திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதில் சிவகார்த்திகேயனுடன் மரியா, சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். தமன் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவருகிறது.
இதனை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதில் சாய் பல்லவி ஜோடி சேர்கிறார். இத்திரைப்படத்தை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பாக கமல் ஹாசனும் சோனி பிக்சர்ஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.
மேலும் “மண்டேலா” இயக்குனர் மடோனே அஸ்வின் இயக்கத்தில் “மாவீரன்” என்ற திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் கூட கவுண்டமணி நடிப்பதாக சமீபத்தில் தகவல் வந்தது. “மாவீரன்” திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளிவர உள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
இவ்வாறு பல திரைப்படங்களில் பிசியாக இருக்கும் சிவகார்த்திகேயன் ரிலாக்ஸாக கிரிக்கெட் விளையாடுகிறார். சமீபத்தில் அவர் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதில் சிவகார்த்திகேயன் வெறித்தனமாக பவுலிங் போடுகிறார். அதனை ஒருவர் பேட்டால் அடிக்கிறார். அந்த பந்து பறந்து போக அதனை பார்த்தவாறு சிவகார்த்திகேயன் நிற்கிறார். இவ்வாறு அந்த வீடியோ அமைந்துள்ளது.
சிவகார்த்திகேயன் ஒரு கிரிக்கெட் ரசிகர் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவர் மிகவும் சிறப்பாக பவுலிங் போடுவார் என்பது தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ மூலம் தெரிய வந்துள்ளது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் “சிவகார்த்திகேயன் அழகாக கிரிக்கெட் விளையாடுகிறாரே” என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Thalaivan cutie playing cricket 🥰❤🤩🔥
@Siva_Kartikeyan epdi ivalo cute ah irukinge enna panalum 🌚❤❤pic.twitter.com/VHe8Qbg3yq#PrinceSK
— taasha (@Tshayyni8) August 3, 2022
