Connect with us

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

Kollywoodgalatta – தமிழ் சினிமா செய்திகள் | Tamil Cinema News | தமிழ் செய்திகள்

சிவகார்த்திகேயனின் அதிரடியான ஆக்சன் பிளாக்.. வெளியானது புதிய படத்தின் டைட்டில் வீடியோ

CINEMA

சிவகார்த்திகேயனின் அதிரடியான ஆக்சன் பிளாக்.. வெளியானது புதிய படத்தின் டைட்டில் வீடியோ

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு வீடியோ வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற தீபாவளி அன்று “பிரின்ஸ்” திரைப்படம் வெளியாகிறது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் மரியா, சத்யராஜ், ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இத்திரைப்படத்தை தொடர்ந்து கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சோனி பிக்சர்ஸுடன் இணைந்த தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக அறிவிப்பு வந்தது. இத்திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார்.

அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் “மண்டேலா” இயக்குனர் மடோன்னே அஸ்வின்னுடன் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என தகவல் வந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.

இதில் சிவகார்த்திகேயனை ஒரு கும்பல் தாக்குகிறது. சிவகார்த்திகேயன் மயக்கம் அடைகிறார். அதன் பின் சிவகார்த்திகேயனின் உடலை பல கயிற்றால் இணைத்து ஒரு பெரிய கை வானத்தில் இருந்து தூக்குகிறது. அதன் பின் பொம்மலாட்டம் போல் அது சிவகார்த்திகேயனை இயங்க வைத்து அந்த கும்பலை தும்சம் செய்கிறது.

அதன் பின் சிவகார்த்திகேயனுக்கு தெளிவு வர, அந்த கயிற்றை எல்லாம் அகற்றி கும்பலை தாக்க தயாராக நிற்கிறார். அந்த கும்பல் அவரை தாக்க ஓடி வருகிறது. அப்போது காமிக்ஸ் புத்தகத்தில் இந்த காட்சி எல்லாம் வரையப்பட்டுள்ளதாக காட்டப்படுகிறது. இவ்வாறு அந்த அறிவிப்பு வீடியோ முடிகிறது.

இத்திரைப்படத்திற்கு “மாவீரன்” என பெயர் வைத்திருக்கின்றனர். இந்த அறிவிப்பு வீடியோவை பார்க்கும் போது இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான ஆக்சன் திரில்லராக அமையவுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த வீடியோவின் இறுதியில் காமிக்ஸ் புத்தகத்தில் இந்த காட்சிகள் எல்லாம் இடம்பெற்றுள்ளது போல் காண்பிக்கப்படுகிறது. இதனை கொண்டு காமிக்ஸில் வரையப்பட்ட கதை நிஜத்தில் நடப்பது போன்ற கதையாக இருக்கலாம் என வியூகிக்கப்படுகிறது. “மாவீரன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

                 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in CINEMA

To Top