CINEMA
சமாதான புறாவாக சிவகார்த்திகேயன்; புதிய திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவர இருக்கும் புதிய திரைப்படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த “டான்” திரைப்படம் மாஸ் ஹிட் ஆனது. ரசிகர்களை அத்திரைப்படம் பெரிதும் கவர்ந்திழுத்தது. இளைஞர்களுக்கு ஏற்றார் போல் பல விஷயங்களை இணைத்து தந்தை பாசத்தையும் சேர்த்து பார்வையாளர்களை சென்டிமண்ட் காட்சிகளால் உருக வைத்திருந்தார் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி.
திரைப்படத்தில் எஸ். ஜே. சூர்யா நடிப்பில் கலக்கி இருந்தார். அவரின் உடல் மொழியும் வசன உச்சரிப்பும் மாஸாக இருந்தது. சிவகார்த்திகேயனின் தந்தையாக நடித்திருந்த சமுத்திரக்கனி ஒரு ஸ்டிரிக்ட்டான தந்தையை அப்படியே பிரதிபலித்திருந்தார்.
கதாநாயகி பிரியங்கா மோகன் க்யூட் கேர்ளாக வலம் வந்தார். தனது அழகு ததும்பும் நடிப்பால் பார்வையாளர்களை கட்டிப்போட்டார். தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை என அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தின் மூலம் தாறுமாறான கலெக்சனை அள்ளி கொடுத்து மீண்டும் செல்லப்பிள்ளை என நிரூபித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அனுதீப் கே. வி. இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார் என்று சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வந்திருந்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளிவந்துள்ளது.
இத்திரைப்படத்திற்கு “பிரின்ஸ்” என பெயர் வைத்துள்ளனர். கையில் உலக உருண்டையுடன் சிவகார்த்திகேயன் தோன்றுகிறார். அவருக்கு கீழே பல நாட்டு வண்ணக் கொடிகளை கைகளில் வரைந்தவாறு பல கைகள் தென்படுகின்றன. அவருக்கு பின் சமாதான புறா பறக்கிறது. இதனை வைத்து பார்க்கும் போது உலக அமைதி குறித்து பேசும் திரைப்படமாக இருக்கலாம் என வியூகிக்கப்படுகிறது. “பிரின்ஸ்” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
“பிரின்ஸ்” திரைப்படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமியுடன் சிவகார்த்திகேயன் கைக்கோர்க்கிறார். இத்திரைப்படத்தை கமல் ஹாசன் தயாரிக்கிறார். சாய் பல்லவி கதாநாயகியாக இணைகிறார். அதனை தொடர்ந்து “மண்டேலா” திரைப்பட இயக்குனர் மடோன்னே அஸ்வினுடன் சிவகார்த்திகேயன் கைக்கோர்க்கிறார். அத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகை கெயிரா அத்வானி கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது.